Header Ads

test

கட்டுநாயக்கா விமான நிலையத்தில் கைதான முல்லைத்தீவு இளைஞன், இன்று நீதி மன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டுள்ளார்..!!!

கட்டுநாயக்கா விமான நிலையத்தில் கைதான முல்லைத்தீவு இளைஞன், இன்று நீதி மன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டுள்ளார்..!!!

அரச அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் தேடப்பட்டுவந்த முல்லைத்தீவைச் சேர்ந்த யோகேஸ்வரன் அனோஜன் (வயது 23) என்ற இளைஞருக்கு
முல்லைத்தீவு மாவட்ட நீதவான்  நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு தேடப்பட்டு வந்த நிலையில் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் குடிவரவு,குடியகல்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது -

முல்லைத்தீவு முறிப்பு பகுதிக்குட்பட்ட வனப்பகுதியில் சட்டவிரோதமான முறையில் மரங்களை வியாபார நோக்கில் அழித்து வந்த நிலையில், இச் செயற்பாட்டை நிறுத்துவதற்க்காகச் சென்ற  வனவளத் திணைக்கள உத்தியோகத்தர் மீது, தாக்குதல் நடாத்தியுள்ளார்.

குறித்த நபர் படையினரின் துப்பாக்கியைப் பறித்தமை உள்ளிட்ட பலதரப்பட்ட  குற்றச் சாட்டின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, பிடியானையும் பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இந் நிலையில் சம்பவத்துடன் தொடர்புபட்ட இளைஞன் வெளிநாடொன்றுக்கு தப்பிச் செல்ல முற்பட்டபோது,  குடிவரவு,குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கைது செய்யப்பட்ட குறித்த இளைஞன் இன்று (12) முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்பட்டுள்ளார்.

குறித்த நபரை 14 நாட்கள்வரை  தடுப்பு காவலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments