முல்லைத்தீவு நீராவியடி விவகாரம் தொடர்பில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் எவரும் தொடர்புகொள்ளவில்லை - அமைச்சர் மனோகணேசன் காட்டம்.!!!

சனிக்கிழமை (21) பிற்பகலளவில் சட்டத்தரணி காண்டீபன் நீராவியடி பிள்ளையார் ஆலய சர்ச்சையை என் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளார். ஆலய தரப்பின் சார்பாகவும் நவநீதன் என்னை அழைத்து தமது நிர்க்கதி நிலைமையை எனது கவனத்துக்கு கொண்டு வந்திருந்தார்.
புற்றுநோயால் இறந்துவிட்ட குருகந்த விகார தேரரின் உடல் நீராவியடிக்கு எடுத்து செல்லப்பட உள்ளதாக சொன்னார்கள்.
நிலைமையின் உக்கிரத்தை புரிந்துக் கொண்ட நான் உடனடியாக அன்று 21ம் திகதி நள்ளிரவில் முல்லை பொலிஸ் தலைமையக பரிசோதகர் மற்றும் பொறுப்பதிகாரி செனவிரட்னவை தொலைபேசியில் அழைத்து, "தடை உத்தரவு" பெறும்படி கடுமையாக பணித்தேன்.
இது பற்றி நான் ஆலய நிர்வாகத்திற்க்கும், சட்டத்தரணி காண்டீபனுக்கும், பிரதேச சபை தலைவர் தவராசாவுக்கும் இரவு வேளை அறிவித்திருந்தேன்.
அதன்படி ஞாயிற்றுக்கிழமை 22ம் திகதி முல்லை பொலிஸ் தலைமையக பரிசோதகர் மற்றும் பொறுப்பதிகாரி செனவிரட்ன நீதவான் நீதிமன்ற நீதிபதியின் வாசஸ்தலத்துக்கு சென்று சட்டப்படி இடைக்கால தடை உத்தரவை பெற்றிருந்தார்கள்.
திங்கட்கிழமை 23ம் திகதி பொலிஸ், ஆலய, மற்றும் விகாரை தரப்பினரை, தேரரின் உடலை தகனம் செய்யும் மாற்று இடத்தை சென்று பார்த்து கூறும்படி நீதவான் உத்தரவிட்டிருந்தார்.
ஆனால் இந்நடவடிக்கை முடிவடைவதற்குள், தமக்கு நீதிமன்ற உத்தரவு கிடைக்கவில்லை என்று கூறி, அவசர, அவசரமாக விகாரை தரப்பினர் தேரரின் கிரியைகளை செய்து முடித்துள்ளனர்.
நீதிமன்ற உத்தரவு தமக்கு தெரியாது என இவர்கள் சொல்ல முடியாது. ஏனெனில் விகாரை தரப்பின் சட்டத்தரணிகளுக்கு இந்த நீதிமன்ற உத்தரவு கூறப்பட்டுள்ளது. அவர்கள் தம் கட்சிகாரர்களுக்கு அறிவுறுத்த கடமைபட்டுள்ளார்கள்.
இப்போது நீதிமன்ற உத்தரவு மீறப்பட்டுள்ளது. அதற்கான விளைவை ஞானசாரர் குழு சந்திக்க வேண்டிவரும்.
இது தொடர்பில் இன்று செவ்வாய்கிழமை நீதிமன்றத்துக்கு அறிவிக்கும்படி, முல்லை பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு நான் நேற்று கூறினேன்.
நான் கொழும்பில் இருந்தபடி பணிச்சுமைகள் மத்தியில் என்னால் இயன்ற அனைத்தையும் செய்துள்ளேன்.
இதை இனி வடக்கில் சட்டத்தரணிகள் சமூகமும், மக்கள் பிரதிநிதிகளும் முன்னெடுக்க வேண்டும்.
ஆனால் இங்கே ஒன்று சொல்ல வேண்டும்!
வன்னி மாவட்ட எம்பிக்கள் ஒருவரும்கூட என்னை இதுவரை இது தொடர்பில் தொடர்பு கொள்ளவில்லை என்பது எனக்கு விசித்திரமாக இருக்கிறது என தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment