Header Ads

test

வவுனியாவில் நேற்று இரவு ஒரே நேரத்தில் உந்துருளிகள் மற்றும் ஈருருளி போன்றவை திருட்டு.!!!

வவுனியாவில் நேற்று இரவு ஒரே நேரத்தில் 
உந்துருளிகள் மற்றும் ஈருருளி போன்றவை திருட்டு.!!!


வவுனியாவில் நேற்றைய தினம் (02) இரவு வேளையில் சம நேரத்தில் மூன்று உந்துருளிகள் மற்றும் ஈருருளி போன்றன  திருடப்பட்ட  சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வவுனியா சிதம்பரபுரம் பகுதியில் இரண்டு உந்துருளிகளும், சமணங்குளம் பிரதேசத்தில்  ஒரு உந்துருளியும், இத்துடன் சிதம்பரநகர் பகுதியில் ஒரு ஈருருளியும்  திருடர்களால் களவாடப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது, சிதம்பரபுரம் பகுதியில் நேற்றிரவு இரு வேறு வீடுகளில் நிறுத்தப்பட்டிருந்த உந்துருளி,ஈருருளி போன்றவற்றை திருடியவர்கள் உந்துருளியின்  திறப்புகள் இல்லாத நிலையில்  குறித்த வாகனங்களை  சேதப்படுத்தி கைவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

சமணங்குளம் பகுதியில் ஆசிரியை ஒருவரின் ஈந்துருளியின் திறப்புடன் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் திருடர்களால் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

சிதம்பரநகர் பகுதியில் ஈருருளி ஒன்றும் திருடப்பட்டுள்ளது. குறித்த திருட்டுச்சம்பவம் தொடர்பில் சிதம்பரபுரம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளமைக்கு அமைவாக  பொலிசார் விசாரணைகளை மேற்க்கொண்டுவருகின்றனர்.



No comments