Header Ads

test

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலை முன்னெடுக்க முன்டியடிக்கும் யாழ் மேயர்.!!!

தியாக தீபம் திலீபனின்  நினைவேந்தலை முன்னெடுக்க முன்டியடிக்கும் யாழ் மேயர்.!!!

தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவு நாளான இன்று (15) நல்லூர் பின் வீதியிலே அமைக்கப்பட்டிருக்கும் நினைவுத் தூபியை துப்பரவு செய்கின்ற செயற்பாடானது கடந்த 5 நாட்களாக இடம்பெற்று வருகின்றது.

குறித்த விடயம் தொடர்பில், இவ் நினைவேந்தல் நிகழ்வின் ஒழுங்கமைப்புப் பணிகளை யாழ் மாநகரசபையினர் பொறுப்பேற்றிருப்பதாக பத்திரிகைகளில் வெளியாகி இருப்பதாகவும், எவரேனும் நிகழ்வு இடத்திற்கு சமூகம் தரவில்லை எனவும் நிகழ்வு ஏற்பாட்டுக் குழுவினர் விசனம் தெரிவித்துள்ளனர்.

யாழ் மாநகர சபை மேயர் கடந்த வருடம் இதே நாளில்   நினைவேந்தல் நிகழ்விற்க்கான மெளன அஞ்சலி இடம் பெற்றுக் கொண்டிருக்கும் போது, அருகிலே காப்புறுதி நிறுவனமொன்றின் நிகழ்வில் தேசிய கீதம் இசைக்கப்படுகின்ற போது தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வை அவமதிக்கு முகமாக  குறித்த காப்புறுதியின் நிகழ்வில் கலந்துகொண்டிருந்தார்.

சம்பவத்துடன் தொடர்புபட்ட மேயர் இவ் வருடம் நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொள்வதற்க்கு அடம்பிடிப்தாக ஏற்பாட்டுக் குழுவினர் விசனம் தெரிவித்துள்ளனர்.

எது எவ்வாறு இருப்பினும் தன் இனத்திற்க்காக தன்னுயிரை தியாகம் செய்த ஒரு மாவீரனின் நிகழ்வு நாளிலே அரசியல் நடாத்தி உங்கள் சுய நலன்களை அனுபவிக்க முற்படாதீர்கள்.

ஒரு கோழையின் நிகழ்வல்ல இது -  ஒரு வீரனின் காந்தீயத்தையே விஞ்சிய ஒப்பற்ற தியாகத்திற்கு உங்களைப்போன்றவர்களின் சில்லறைத்தனமான அரசியல் நாடகங்கள் ஈடாகது என்பது நிதர்சனம்.


No comments