Header Ads

test

நக்குண்டார் நாவிழந்தார்" என்பதற்கு அமைவாக செயற்படும் தமிழ் தேசிய கூட்டமைப்பு - வரதராஜப்பெருமாள்!!!

"நக்குண்டார் நாவிழந்தார்" என்பதற்கு அமைவாக செயற்படும் தமிழ் தேசிய கூட்டமைப்பு  -  வரதராஜப்பெருமாள்!!!

வடகிழக்கு முன்னாள் முதலமைச்சர் வரதராஜப்பெருமாளின் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று (24) யாழிலுள்ள கட்சி அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.

குறித்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெராவித்துள்ளார் -

தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள் 
தவறானவர்களாகவும், தப்பானவர்களாகவும் காணப்படுகின்றனர்.அவர்களது  இராஜதந்திரம் தந்த விளைவு என்ன என்பது தமிழ் மக்கள் தெரிந்து கொண்டுள்ளார்கள்.

"நக்குண்டார் நாவிழந்தார்" என்பதற்கு அமைவாக செயற்பட்டுவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பு இதுவரை தமிழ் மக்களுக்கு எதையும் பெற்றுக்கொடுக்கவில்லை.

தமிழ் தேசிய கூட்டமைப்பினர் நடந்துகொள்ளும் விதம் இவர்கள் ரணிலுக்கு வேண்டியவர்கள் என்பதையே காட்டி நிற்க்கின்றது. நாட்டினுடைய  ஜனாதிபதியை தீர்மானிக்கும் ஆற்றல் கொண்டவர்களாக தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் காணப்படவில்லை.

இவை இவ்வாறு இருக்கையில்,கடந்த காலத்தை திரும்பிப் பார்த்தால் இவர்களது சாணக்கியம் எப்படி அமைந்துள்ளது என்பதை தெட்டத்தெளிவாக வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.இதற்கமைவாக  பார்த்தால் 2010ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் பொன்சேகா வென்றிருக்க வேண்டும்.

இது தொடர்பில் மேலும் தெரிய வருவது -
ரணில் விக்கிரமசிங்க சுயமாக ஒரு முடிவை எடுப்பதற்கு பதிலாக தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர் யார் என்று கேட்கின்றார் என்றால்,சஜித் பிரேமதாசவை ஓரங்கட்டவே இந்த நாடகத்தை ரணில் விக்கிரமசிங்க நிகழ்த்தியுள்ளார்.

ரணிலின் பொம்மலாட்டங்களுக்கு துணை போகின்றவர்களாகவும், அவரது கைப் பிள்ளைகளாகவுமே தமிழ்தேசிய கூட்டமைப்பினர் காணப்படுவதாக முன்னாள்  வடகிழக்கு முதலமைச்சர் வரதராஜப்பெருமாள் குறிப்பிட்டுள்ளார்.


No comments