காலம் இட்ட கட்டளைப்படியும் வரலாறு இட்ட வழியிலும் காலம் சரியான பாடத்தை கற்பிக்கும் என்று நம்புகின்றேன் - டக்ளஸ் தேவானந்தா பாரளுமன்றத்தில் சீற்றம்.!!!

அதிகாரத்தில் யார் இருக்கிறார்களோ இருப்பவர்களால் வாரி இறைக்கப்படும் பணத்தை கையிலேந்திக்கொண்டு அவர்களின் கதிரைகள் ஆட்டம் காணாது இருக்க, தம்மாலான சித்து விளையாட்டுக்களை காண்பித்து அவர்களை பாதுகாக்கும் நடவடிக்கையிலே தமிழ் சட்டமான்கள் இறங்கியுள்ளார்கள்.
"பிச்சைக்காரன் புண்ணைக்காட்டி பிளைப்பு நடத்துவதைப்போலவே" இன்று தமிழ் தேசியத்தை தேசிய கீதமாகக்கொண்டவர்கள் காணப்படுகிறார்கள்.
* சிறைகளிலே வாடும் உறவுகளில் ஒருவரையேனும் இதுவரை மீட்டார்களா.???
* அது போக ஆயுள் சிறைக் கைதி சுதாகரனின் மனைவியின் மரணத்துக்கு பின்பு அவர்களது பிள்ளைகள் தனிமைப்பட்டுவிட்டதை யாவரும் அறிந்ததே.
இக் குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில்கொண்டு ஆக குறைந்த பட்சம் ஜனாதிபதியோடு பேச்சுவார்த்தை நடாத்தி குறித்த பிள்ளைகளின் எதிர்காலம் சிறக்க சுதாகரனையாவது விடுவித்தார்களா.???
* அழிந்துகொண்டிருக்கும் தமிழ் மக்கள் வாழும் பகுதிதளில் உள்ள விவசாய குளம், மற்றும் வயல் நிலங்களை மீள புனரமைத்து தன்னிறைவான பொருளாதார வளர்ச்சிக்கு முயற்சித்தார்களா.???
* இன்று பாரியளவில் தலைவிரித்தாடும் வேலையில்லா பிரச்சினைக்கு தீர்வுபெற்றுகொடுப்பதற்கு வர்த்தக வலயங்களை உருவாக்கினார்களா, அல்லது அதற்க்கான முயற்சிகளை முன்னெடுத்தார்களா.???
* " தெருத்தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு அடித்த கதையை இன்று பலர் நினைவுபடுத்துகின்றார்கள் கம்பரெலிய திட்டத்தின் ஊடாக.
ஏதோ படியேறி பெற்றுவந்ததாக ஒரு மாயாஜாலத்தை காண்பிக்க முயற்சிக்கிறார்களா."???
* இரத்தம் சிந்தி போராடியவர்களின் தியாகங்களை கொச்சைபடுத்தி பல நிகழ்வுகளை அரங்கேற்றியவர்களே இன்று தமிழ்தேசியம் பேசி தமது இருப்பை நிலைநிறுத்த முயற்சிக்கிறார்களா.???
* சொல்லப்போனால் கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தை தேசிய உயிரியல் பூங்காவாக மாற்றுவதற்க்கு தீர்மானம் நிறைவேற்றியவர்களும் இந்த புனிதர்கள்தான்.
குறித்த சம்பவத்தை தட்டிக்கேட்க முற்பட்ட முன்னாள் போராளிகளை சிறைக்குள் தள்ளிய மகாத்மா காந்திகளும் எம் மண்ணில் வாழ்த்தான் செய்கின்றார்கள்.
* திருவிழாக்கள் ஆரம்பிக்கும் போது மாவீரர்களை பற்றி பேசுவது,பாடல்கள் ஒலிபரப்புவது, சிவப்பு மஞ்சள் கொடிகளை பறக்கவிடுவது,தொப்பி, மற்றும் மேலங்கிகளை அணிந்துகொண்டு மேடைகளிலே தேசியம் பேசி தமிழ்மக்களின் காவலர்களாக தம்மை அடையாளம் காட்டுகின்ற பிச்சைக்காரதனத்தை அரங்கேற்றிவருகிறார்கள்.
* தமிழ் மக்களின் தலையில் தொடர்ந்தும் சம்பல் அரைப்பதை இவர்கள் கைவிடுவதாக இல்லை,இதை மக்கள் உணர்ந்து இனிவரும் காலத்தில் தகுந்த பாடத்தை கற்ப்பிப்பார்கள் என ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா பாராளுமன்றிலே கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
1978ஆம் ஆண்டின் 02ஆம் இலக்க நீதித்துறைச் சட்டத்தின் கீழான கட்டளை தொடர்பிலான விவாதத்தில் கலந்து கொண்டு, உரையாற்றுகையிலேயே குறித்த விடயம் தொர்பில் தெரிவித்தார்.
நீதிமன்றங்களில் காணப்படும் வழக்குகளில் காணப்படும் குறைபாடுகளை நீக்கி நிவர்த்தி செய்யவேண்டும்.
அதுமட்டுமல்லாது நீதிமன்றம் , நீதிபதிகள் போன்றவற்றின் எண்ணிக்கையில் காணப்படும் குறைகளை நீக்கவேண்டும்.
குறித்த நீதிமன்றங்களில் அப்பகுதியில் நடைமுறையிலுள்ள மொழிதொடர்பான பிரச்சினைகளை தீர்க்குமுகமாக குறித்த மொழிகளில் பரீட்சயமான நீதிபதிகளை சேவையில் ஈடுபடுத்தவேண்டும்.
இது குறித்து மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில் -
சட்டமா அதிபர் திணைக்களத்தில் பணிக்கமர்த்தப்படும் சட்டத்தரணிகளின் அளவு மற்றும் அரச திணைக்களத்தின் பணியாளர் சபையினையும் விரிவுபடுத்த வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
குறிப்பாக எமது நாட்டிலே அண்ணளவாக 300க்கும் மேற்பட்ட மத்தியஸ்த சபைகளும் குறித்த சபைகளில் 7000க்கும் அதிகமான மத்தியஸ்தர்கள் செயற்படுவதாக அறியமுடிகிறது.இவை தொடர்பான செயற்பாடுகளை கவனத்தில்கொள்ள வேண்டும்.
சொல்லப்போனால் சட்டத்தை கைதேர்ந்த தமிழ் தேசியவாதிகள் அதிகார கதிரைகளை ஆட்சி செய்துகொள்ளும் வேளையில் தமிழ் மக்கள் மீது காணப்படும் சட்ட முரண்பாடுகளை தளர்த்துவதற்கு இவர்கள் ஒருபோதும் முன்னின்றதில்லை.இவ்வாறான செயற்பாடுகளால் ஆக மொத்தத்தில் தமிழ் மக்கள் கண்ணைகட்டி காட்டில் விட்டவர்களாகத்தான் காணப்படுகின்றார்கள்.
பணப்பெட்டிகளை கைமாறும் செயல்பாடுகளை மாத்திரம் மிகவும் கச்சிதமாக நிறைவேற்றி ஆட்சி பீடத்திலுள்ளவர்களின் இருப்பை உறுதிசெய்கின்றார்கள்.
திறானியற்றவர்கள் என் மீது அபாண்டமான பழியை சுமத்த முற்படுகிறார்கள். இவ் விடயங்களைப் பற்றி பேச எனக்கு அனைத்து தகுதிகளுமுண்டு.
களுத்துறைச் சிறையில் என் மீது தாக்குதல் நடத்தியவர்களுக்கு எதிராக சாட்சியமளிக்க நீதிமன்றம் எனக்கு அழைப்பானை விடுத்திருந்தது.
எய்தவன் இருக்க அம்பை எதற்கு நோவான் என்ற சிந்தனைக்கு அமைவாக சாட்சியமளிக்க செல்லவில்லை.மேலும் என் மீது தற்கொலைக்குண்டுத் தாக்குதல்
நடாத்த முற்பட்ட பெண்ணை இதுவரை விடுவிக்கவில்லை.குறித்த பெண்ணை விடுதலை செய்யக்கோரியும் சட்டம் இணங்கிப்போகவில்லை.
சட்டத்தை கையில் எடுக்க நான் ஒன்றும் சட்டத்தரணியல்ல.இருந்தும் சட்ட வல்லுநர்களும் சட்ட ஆலோசகர்களும் என்னருகில் உள்ளார்கள்.
பலநூறு சிறைக்கைதிகளை விடுவித்து அவர்களது பெற்றோர்களிடம் ஒப்படைத்த வரலாறு எனக்குண்டு.இவற்றை சட்டத்தரணியும் மனித உரிமை ஆர்வலருமான அமரர் மகேஸ்வரி வேலாயுதம் ஊடாக செயற்படுத்தியதை யாவரும் அறிவர்.
யுத்த நிறைவின் பின்னதாக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்கள் 120000ம் வரையில் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைக்க நான் அரும்பாடுபட்டுள்ளேன்.
எனது இத்தகைய பணிக்கு சட்டம் கைகொடுத்ததுக்கும் அப்பால் குறித்த காலத்தில் ஆட்சியில் இருந்தவர்களோடு நான் கொண்டிருந்த நல்லிணக்கமே காரணமாகும்.
முன்னாள் போராளிகளை நான் ஒருபோதும் பிரித்துப்பார்த்ததில்லை. யாவரும் தமிழ்த்தாய் பெற்ற பிள்ளைகளாகவே பார்க்கின்றேன்.
இருந்தும் காலம் இட்ட கட்டளைப்படியும் வரலாறு இட்ட வழியிலும் காலம் சரியான பாடத்தை கற்பிக்கும் என்று நம்புகிறேன் என பா.உ டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

Post a Comment