முற்றவெளிப் பிரகடணம் - எழுக தமிழ்.!!!
முற்றவெளிப் பிரகடணம் - எழுக தமிழ்.!!!
தமிழர்கள் இலங்கைத் தீவிலே வாழ்வதற்க்கான அனைத்து தகுதிகளையும் கொண்ட ஒரு இனம். வரலாற்று பதிவுகளின் படி தமிழர்கள் மூத்த குடிகளாகவும், தமிழர்களுக்கே உரித்தான செம்மொழியாகிய தமிழ்மொழியும் முதன்மை வகிக்கிறது.
தமிழர்கள் பிறப்பிலேயே கல்வி அறிவும் வீரமும் இன்னொரன்ன அறிவுகளையும் கொண்டு விளங்கினர் என்பதற்கு பல சான்றாதாரங்கள் அடையாளமிட்டுள்ளன.
இது போக பண்டாரவன்னியன் காலத்திலேயே தமிழர்களின் வீர மரபு எழுதப்பட்டுள்ளது. இதை யாராலும் மறுக்கவும், மறக்கவும் முடியாது.
இவ்வாறு ஓர் இனமாக வாழத் தகுதிகொண்ட தமிழினம் இன்று ஏன் உலக நாடுகளிடம் கையேந்தி உரிமைக்காய் உரத்து குரலெழுப்பவேண்டியுள்ளது.
ஆண்டாண்டு காலமாக எம்மவர் மீது திணிக்கப்பட்ட சதிவலைகளே இதற்க்கு காரணம்.
மொழி, கல்வி, நிர்வாகச் செயற்பாடுகள்,புவியியல் ரீதியான பறிப்புக்கள் அது மட்டுமல்லாது ஆங்காங்கே தமிழ் இளைஞர் யுவதிகள் படுகொலை செய்யப்பட்டமை, இதைவிட பெருத்த துரோகமாக பல கலவரங்களை தூண்டி எம்மவர் வாழ்ந்த பகுதியில் கோரத் தாண்டவமாடி கொண்றொழிக்கப்பட்டமையும் வரலாறு காட்டி நிற்கிறது.
குட்டி மணி தங்கத்துரை தொடங்கி இன்றுவரை தொடர்கிறது தமிழர் மீதான நயவஞ்சக அழிப்புக்கள்.
இவற்றினுடைய வெளிப்பாடே தமிழர்கள் ஆயுதமேந்தி தனிநாட்டுக் கோரிக்கையுடன் போராட நிர்ப்பந்தித்தது எனலாம்.
இப்போராட்டங்களை தமிழ் இளைஞர்கள் குழுக்களாக இணைந்து பல இயக்கங்களை ஆரம்பித்து போராடினாலும் பின்னாளில் அவற்றில் பல அழிந்து போனமையும் நிதர்சனமானது.
இவ் இயக்கங்களில் ஒன்றாவே தமிழீழ கோரிக்கையுடன் விடுதலைப்புலிகள் போராட்டத்தை தொடர்ந்தனர்.
நேரம் குறித்து காலம் குறித்து உயிர்ப்பூக்களை அள்ளிச் சொரிந்தவர்களும் தமிழர் பிள்ளைகள் மாத்திரம்தான் என்பது உலகறிந்த உண்மை.
உலகே உற்றுப் பார்க்குமளவுக்கு இப் போராட்டங்கள் தொடர்ந்ததால் தமது இருப்புக் கூட கேள்விக்குறியாகிவிடுமோ என்று எண்ணியே பலத்த துரோங்களை முனைந்தனர்.
இவை இப்பிடியே இருக்க, சொல்லில் வடிக்க முடியாத தியாகங்கள் தமிழர் குருதியில் எழுதப்பட்டது.
இவை இப்படியே இருக்க, தமிழ் இளைஞர் யுவதிகள் கைது செய்யப்பட்டு இன்றும் அரசியல் கைதிகளாக சிறைகளில் வாடுகின்றார்கள்.
ஒரு நிழல் அரசாங்கத்தையே உருவாக்கி ஆண்டுவந்த இனம் ஆயிரமாயிரம் வதைகளை சந்தித்தது யாவரும் அறிந்ததே.
ஆலயங்கள் மீதான குண்டுத்தாக்குதல்கள்,கற்ப்பளிப்புக்கள்,
மண் பறிப்புக்கள்,படுகொலைகள் போன்ற வல் வளைப்புக்கள் தமிழர் மீது அரங்கேற்றப்பட்டது.
இவற்றின் தொடர்ச்சியே இறுதிக்கட்ட யுத்தம் முன்னெடுக்கப்பட்டது.
இந்த வேளையில்தான் தமிழர்கள் மீதான கோரத் தாண்டவம் உலக நாடுகளின் கண் முன்னே கட்டவிழ்த்து விடப்பட்டது.
மாவிலாறு தொடங்கி முள்ளிவாய்க்கால் வரை தமிழர்கள் வகை தொகையின்றி கருக்கப்பட்டார்கள் கந்தக புகையால்.
உலக ராசாக்களின் உதவியோடு இத் தூரோகம் முன்னெடுக்கப்பட்டு தமிழர்களின் விடுதலைப்போராட்டம் மெளனிக்கப்பட்டது.
உலக ராசாக்கள் ஒன்று கூடி முதுகில் குற்றவில்லை என்றால் தமிழர் வீரம் பார்த்திருப்பார்கள், ஜ.நா சபையிலும் தமிழர்களின் கொடி பறக்க பேச்சுக்களுக்கு வந்திருப்பார்கள் கொளரவமாக.
பல விதமான தடைசெய்யப்பட்ட ஆயுதங்களையும் பிரயோகித்தது மட்டுமல்லாமல் பலர் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டனர்.இன்றுவரை காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான முடிவுகள் கிட்டப்படவில்லை.
கண்ணீருடன் வீதிகளில் கூடாரங்கள் அமைத்து போராட்டங்களை நடாத்தி வருகின்றனர் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்.
அரசியல் கைதிகளும் சிறைக்குள் போராட்டம்,உறவுகள் வெளியே போராடியும் முடிவுகள் எவையும் முடிச்சவிழ்க்கப்படவில்லை.
தமிழர்களின் தமிழ் தேசிய அரசியல் தலைமைகள் கண் மூடித் தூங்குகின்ற நிலையே இன்றுள்ளது.
ஆட்சியில் இருக்கும் அரசாங்களுக்கு குடை பிடிப்பதையும், மக்களின் பிரச்சினைகளை கண்டும் காணாமல் இருப்பதுமே இன்று நிரந்தரமாகிவிட்டது.
இன்றைய நிலையில் தமிழர்கள் பல அசொளகரியங்களை அனுபவிக்கின்றனர்.
இதற்க்கான முடிவுகள் எவையும் கிட்டவில்லை.
தத்தம் கட்சிகளை வளர்ப்பதும் தமது இருப்புக்களை பாதுகாப்பதும், கட்சிகளுக்கு இடையே கருத்து மோதல்களும் என
தமிழ் தரப்புக்கள் காணப்படுகிறதே தவிர மக்களின் பிரச்சிகளை யாரும் கண்டு கொள்ளவில்லை.
மாற்றின கட்சிகள் தமிழர்களின் வாக்குப்பலங்களைப் பெற்று தமது இருப்பை உறுதிசெய்கின்றனர்.
வாக்குகளைப் பெற்றவர்கள் தமிழர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்படும் துரோகங்களை கண்டும் காணாது இருக்கின்றனர்.
தமிழர் பகுதியில் தமது கட்சி காரியாலயங்களை அமைப்பதும், தேர்தல் காலங்களில் சட்டி, பெட்டி, பானைகளை வழங்குவதும் வழக்கமாகிவிட்டது.
இந்த இடத்திலேதான் கேள்வி ஒன்று எழுகிறது.!! தமிழர் பகுதியில் அமைக்பப்பட்டிருக்கும் மாற்றின கட்சிகளின் கட்சி அலுவலகங்களைப் போன்று, குறித்த கட்சி அலுவலகங்களை அமைப்பவர்களின் பகுதியில் இதே போன்றதொரு செயற்பாட்டை மேற்க்கொள்ள முடியுமா.???
இதற்க்கான பதில் அனைத்துமே பூச்சியமாகவே காணப்படுகிறது.
தமிழர்கள் மாற்றின கட்சிகளுக்கு வாக்களிப்பது இவை எல்லாம் "" சொந்த காசிலே சூனியம் வைப்பதைப்போல்""" இருக்கின்றது.
இனிவரும் காலங்களில் தமிழர்களே விழித்துக் கொள்ளுங்கள்.உங்கள் பகுதியில் மாற்றினத்தவர்கள் கட்சி காரியாலங்களை அமைப்பதையோ,உங்கள் பொன்னான வாக்குகளை அவர்களுக்கு வழங்குவதையோ தவிர்த்திடுங்கள்.
இவ்வாறான செயற்பாடுதான் களத்தில் வீழ்ந்த வீரர்களுக்கு நீங்கள் செய்யும் நன்றிக்கடன்.
"கொடியேறும் நேரத்தில் கம்பத்தை சரித்துவிடாதீர்கள்"
"இது காலத்தின் கட்டாயம். தமிழர்களே ஒன்றாக சேர்ந்து ஒரு குடையின் கீழ் நின்று உங்களுக்கான தீர்வுக்கான தேரை இழுங்கள்.இதிலே தவறியேனும் தவறிழைத்து விடாதீர்கள்.நாளை உங்கள் பிள்ளைகள் உங்களையே துரோகி என்ற பட்டம் சூட்டிவிட நீங்களே காரணமாகி விடாதீர்கள்."
" பண்டார வன்னியன் வாழ்ந்த பூமியில் எந்த எட்டப்பர்களின் பாதங்களையும் பட்டுவிட விட்டுவிடாதீர்கள். இது உங்களுக்கான நேரம்."
"உங்கள் நரம்பில் தமிழ் இரத்தம் ஓடினால் உன் இனத்துக்கே நீயே துரோகம் இளைக்காதே". இன்றைய இளைஞர் யுவதிகளே குறிப்பாக இவ் விடயத்தில் மிக கவனமாக இருங்கள்.
அற்ப சொற்பங்களுக்காக அடி பணிந்துவிடாதீர்கள்.
"யானைப் பசிக்கு பொரி" போட்டதைப்போல்
சிலவற்றை வழங்கி உங்களை மூளைச் சலைவை செய்து, தமது இலக்குகளை நிறைவேற்ற விட்டுவிடாதீர்கள்.
இவ்வாறான சூழ் நிலையில்தான் "எழுக தமிழ்" எழுச்சிப் போராட்டம் உயிர் பெற்றிருக்கிறது.
காலத்தின் தேவை உணர்ந்தே இன்று, இவ் பேரணி நிகழ்வு உருவாக்கப்பட்டுள்ளது.
இவற்றை யார் தலைமை தாங்குகிறார்கள்,யார் இதை முன்னெடுக்கிறார்கள் என்ற சிந்தனையை விடுத்து, தமிழர்களின் உரிமைக்கான விடயம் என்பதை மாத்திரம் நினைவில் கொள்ளுங்கள்.
கட்சி பேதமற்ற இந் நிகழ்வுக்கு மூத்த அரசியல் கட்சிகளும் ஏனைய தமிழ் கட்சிகளும் ஆதரவு வழங்கவுள்ளதாக அறிய முடிகிறது. அது மட்டுமல்லாமல் அனைத்து சமய அமைப்புக்கள்,சமூக அமைப்புக்கள்,
அரச,அரச சார்பற்ற திணைக்களங்கள், சமாசங்கள், புத்தியீவிகள், பல்கலைக்கழக மாணவர் ஒன்றியங்கள் என ஒருமித்து நிற்பதை காண முடிகின்றது.
இதே போன்ற ஒரு காலத்தில்தான் 04.08.1987ம் ஆண்டு சுதுமலைப் பிரகடணம் வெளியிடப்பட்டது யாவரும் அறிந்ததே. இதேபோன்றுதான் இன்று யாழ்.முற்றவெளியில் எழுக தமிழ் பிரகடணம் வெளியிடப்பட இருக்கின்றது.
இப் பேரணியிலே அனைத்து தமிழ் உணர்வாளர்களும், தமிழ் கட்சிகளும் இணைந்துகொள்ள வேண்டிய காலத்தின் கட்டாயம்.
குறித்த நிகழ்வானது "தியாக தீபம் திலிபனின் நினைவு நாள்" அனுஸ்டிக்கப்படும் வேளையிலே இடம்பெறுவது உலக்கின் கண்களை அறைந்து உரிமைக்கான வழியை காட்டும் என்பதில் எவ்வித அச்சமுமில்லை.
* வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான விசாரணை.
* அரசியல் கைதிகளின் விடுதலை.
* சிங்கள பெளத்த மயமாக்கலை உடனடியாக நிறுத்துதல்.
* சர்வதேச போர்க்குற்ற விசாரணை.
* வட கிழக்கில் இராணுவ மயமாக்கலை உடனடியாக நிறுத்துதல்.
* இடம்பெயர்ந்த அனைத்து மக்களையும்
அவர்களது பாரம்பரிய இடங்களில் குடியமர்த்துதல்.
போன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இக் கோரிக்கைகளை யாராலும் வெறுத்தொதுக்க முடியாது.
அன்று திலீபன் சொன்ன "மக்கள் புரட்சி வெடிக்கட்டும்" என்ற வார்த்தைகள் இப்போதுதான் அதன் பயனைப்பெற்றுள்ளது.
ஒவ்வொரு தமிழனும் திலீபனின் கனவை நிறைவேற்ற வேண்டுமென நினைத்தால் நாளை (16) யாழ் மண்ணில் இடம் பெறும் முற்வெளிப் பிரகடனத்தில் கலந்துகொள்ளுங்கள்.இல்லையேல் வரலாற்று துரோகத்திற்கு ஆளாகிவிடுவீர்கள்.
கட்சி பேதங்களை மறந்து கை கோர்த்திடுங்கள் இல்லையேல் தேர்தல் காலங்களில் வீட்டுக்கதவுகளை தவறியேனும் தட்டி விடாதீர்கள்.
ஊரே கூடி தேருளுங்கள் உரிமைக்காய்,
உதிரம் சிந்த வேண்டாம் எப்போதும்,
ஒரு நாளை செலவிடுங்கள் உன் இனத்திற்க்காய்,
கட்சிகள் மறந்து கட்டி அணைப்போம் முற்றவெளியில் எழுக தமிழாய்,
எழுந்திடு தமிழா இனியும் வேண்டாம் உறக்கம்....
"தமிழர்கள் எப்போதும் போரை விரும்பியவர்களுல்ல,
மற்றவர்கள் மீது போரை திணித்தவர்களுமல்ல".
போராட்டம் எம் மீது திணிக்கப்பட்டதால் தமிழர்கள் வீரம் வெளிப்பட்டது இதனால்த்தான் உலக ராசாக்கள் எல்லாம் படி இறங்கி எங்கள் கைகுலுக்கிப் போயினர்.அப்போது புரிந்திருக்க வேண்டும் தமிழர் பலம்.
இதே பலத்தை நாளைய தினம் உலகறிய செய்யுங்கள்.
உலக ராசாக்கள் தமிழர் பக்கம் திரும்பிட.
முற்றவெளி பிரகடணம் - எழுக தமிழ் ல் கலந்து கொள்ளுங்கள் அமைதியான முறையில்.
நாளைய தினம் தமிழர் பலத்தை காண்பியுங்கள் எழுக தமிழின் ஊடாக.உணர்வுள்ள ஒவ்வொருவரும் இணைந்திடுங்கள்.
" இன்றும் திலீபன் பசியோடுதான் இருக்கின்றான்."

Post a Comment