தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக தொலைக்கல்விப் பிரிவு தமிழ் இணையக் கல்விக்கழக தமிழியல் சிறப்புப் பட்டத்திற்க்குரிய புதுமுக மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்வு சிறப்புற இடம்பெற்றுள்ளது - யாழ்.தென்மராட்சி, மீசாலை பாரதி கல்வி நிலையம்.!!!

யாழ். தென்மராட்சி, மீசாலை பகுதியில் அமைந்துள்ள பாரதி கல்வி நிலையத்தில் இயங்கும் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக தொலைக்கல்விப் பிரிவு தமிழ் இணையக் கல்விக்கழக தமிழியல் சிறப்புப் பட்டத்திற்க்குரிய புதுமுக மாணவர்களின் வரவேற்பு நிகழ்வு இன்று (22) இடம்பெற்றுள்ளது.
குறித்த கல்வி நிலையத்தினூடாக வருடம் தோறும் பலர் பட்டங்களை பெற்று வெளியேறும் பட்டதாரிகள் தங்களுடைய தொழில் தகமைளை பூர்த்தி செய்வதன் மூலம் சிறப்பான நிலையை அடைகின்றனர்.இது மட்டுமல்லாமல் வடக்கில் பல வருடகாலமாக மிக சிறப்பான முறையில் கல்விச் செயற்பாட்டை முன்னெடுத்து வரும் முன்னணி கல்வி நிலையமாகவும் விளங்குகின்றது.
இவ் கல்வி நிலையத்தினூடாக தமிழர் பாரம்பரியம், கலை,கலாச்சாரம் போன்றவற்றை முன்னேற்றிச் செல்வதையும் அவதானிக்க முடிகிறது.
இதனடிப்படையில் இன்று புதிய மாணவர்களை வரவேற்க்கும் நிகழ்வு மிகச் சிறப்பான முறையில் இடம்பெற்றது.மாணவர் ஒன்றியத்தின் தலைவர் யோ.தர்சன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில், கல்வி நிலைய இயக்குநரும், பல்கலையின் வட மாகாண இணைப்பாளரும், சிரேஷ்ட விரிவுரையாளருமான திரு.க.ரஜனிகாந்தன், இணை இயக்குநர் துஷ்யந்தகுமாரி ரஜனிகாந்தன், விரிவுரையாளர்களான சி.இளந்திரையன், க.முருகதாஸ் ஆகியோர் விருந்தினர்களாக கலந்து சிறப்பித்துள்ளனர்.
குறித்த நிகழ்வில் பல்வேறு கலை நிகழ்வுகள் இடம்பெற்றதோடு மட்டுமல்லாமல் தமிழர் பாரம்பரியங்களை எடுத்தியம்புகின்ற வகையில் "வாழ்வியலை சிறப்பிப்பது காதல் திருமணமா? அல்லது நிச்சயிக்கப்பட்ட திருமணமா?" என்ற தலைப்பின் கீழ் விரிவுரையாளர் திரு.க.முருகதாஸ் அவர்களின் தலைமையில் பட்டிமன்றம் சிறப்பான முறையில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment