Header Ads

test

ஜனாதிபதி தேர்தலில் தனக்கு ஆதரவு தெரிவிக்குமாறு தனியார் பேருந்து தொழிலாளர்களுடன் இடம்பெற்ற சந்திப்பின் போது கோத்தபாய இதனை குறிப்பிட்டுள்ளார்.!!!

ஜனாதிபதி தேர்தலில் தனக்கு ஆதரவு தெரிவிக்குமாறு தனியார் பேருந்து தொழிலாளர்களுடன் இடம்பெற்ற சந்திப்பின் போது கோத்தபாய இதனை குறிப்பிட்டுள்ளார்.!!!


நான் பாதுகாப்பு செயலாளராக இருந்து மிகவும் பாதுகாப்பான மற்றும் ஒழுக்கமான நாட்டை உருவாக்க வேண்டும் என வாக்குறுதி வழங்கியிருந்தேன். அத்துடன் எனக்கு ஜனாதிபதியாக வேண்டிய அவசியம் இல்லை. நான் வேலை செய்து காட்டிய ஒருவராகும்.

இங்கு கஷ்டப்பட்டு உழைக்கும் பணத்தை கப்பமாக வழங்கினால், அது என் கையில் தங்காது. இந்நிலைமைகளை இல்லாமல் செய்து பாதுகாப்பான நாட்டை உருவாக்குவேன் என வாக்குறுதி அளிப்பதாக கோத்தபாய தெரிவித்துள்ளார்.

எனினும் அண்மைய தரவுகளுக்கு அமைய ஜனாதிபதி தேர்தல் களத்தில் கோத்தபாயவுக்கு
  நிலைப்பாடு இல்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அவ்வாறான நிலைப்பாட்டை உணர்ந்துள்ள கோத்தபாய, தான் ஜனாதிபதியாக வேண்டிய அவசியம் இல்லை என கூறியுள்ளதாக அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கடந்த மஹிந்த அரசாங்கத்தின் கீழ் பாதுகாப்பு செயலாளராக செயற்பட்ட கோத்தபாய ராஜபக்ஷ, அரசாங்க அதிகாரிக்கு மேலதிகமாக பல்வேறு அதிகாரங்களை கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments