Header Ads

test

யாழ். வடமராட்சி, அல்வாய் தெற்கில் கோஷ்டி மோதல்.!!!

யாழ். வடமராட்சி, அல்வாய் தெற்கில் கோஷ்டி மோதல்.!!!


யாழ். வடமராட்சி, அல்வாய் தெற்கில் நேற்றிரவு இடம்பெற்ற கோஷ்டி மோதலில் காயமடைந்த 5 பேர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதேவேளை, இந்த சம்பவத்துடன் தொடர்புபட்ட சந்தேகநபர்கள் 4 பேர் நெல்லியடி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அல்வாய் தெற்கில் நேற்றிரவு 11 மணியளவில் இரண்டு குடும்பங்களுக்கிடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அந்த வாக்குவாதம் கோஷ்டி மோதலாக மாறியுள்ளது.

சம்பவம் தொடர்பில் அப்பகுதி மக்கள் நெல்லியடிப் பொலிஸாருக்குத் தெரியப்படுத்திய நிலையில் உடனடியாக சம்பவ இடத்துக்குப் விரைந்த பொலிஸார் அங்கிருந்த 4 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளளனர்.

தீவிர விசாரனையில் ஈடுபட்ட பொலிஸார்  மேலும் 5 பேர் சந்தேக நபர்களை  கைது செய்துள்ளனர்.

மேலதிக விசாரனைகளை நெல்லியடிப் பொலிஸார் மேற்க்கொண்டு வருகின்றனர்.

No comments