இலங்கைக்கான ஜப்பான் நாட்டின் இராஜதந்திரிக்கும் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனுக்கும் இடையில் சந்திப்பு.!!!

இலங்கைக்கான ஜப்பான் நாட்டினுடைய தூதுவராலயத்தின் அரசியல் தலைமையின் இரண்டாம் செயலாளர் ராஹ்சி ஒஷாகி (Takeshi Ozaki) அவர்களுக்கும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அவர்களுக்கும் இடையில் இன்றைய தினம் (24)சந்திப்பு ஒன்று வவுனியா மாவட்டத்தில் உள்ள பாராளுமன்ற உறுப்பினரின் அலுவலகத்தில் இடம்பெற்றது.
இச் சந்திப்பில் சமகால அரசியல் தொடர்பாகவும்,ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தமிழ் மக்களினதும், குறிப்பாக வன்னி மாவட்ட மக்களின் நிலைப்பாடு தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
மேலும் பாராளுமன்ற உறுப்பினர் அவர்களால் வவுனியா பல்கலைக்கழகத்திற்கான நிதி உதவியும்,வன்னி மாவட்டத்தில் உள்ள வளங்களை பயன்படுத்தி தொழிற்சாலைகளை அமைத்து, இளைஞர் யுவதிகளுக்கான வேலை வாய்ப்புக்களை ஏற்படுத்துவது தொடர்பாகவும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
இதற்க்கு பதிலளித்த ஜப்பான் நாட்டின் தூதுவர் தமது நாட்டின் அரசாங்கத்துடன் கலந்துரையாடி பொருத்தமான திட்டங்களின் அடிப்படையில் நிதி உதவி வழங்குவதாகவும்,பல்கலைக்கழகத்திற்கான குறுகிய நீண்டகால திட்டமுன்மொழிவுகளை தரும் பட்சத்தில் தங்கள் நாட்டின் அரசாங்கத்துடன் இணக்கம் கண்டு அதற்கான நிதி உதவியை பெற்றுதருவதாகவும் தெரிவித்துள்ளார்.

Post a Comment