Header Ads

test

தொடரும் இலங்கை போக்குவரத்து சபையினரின் அராஜகம்.!!!

தொடரும் இலங்கை போக்குவரத்து சபையினரின் அராஜகம்.!!!

இலங்கை போக்குவரத்து சபையினரின் பேருந்துகளில் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் பயணிகளுடன் முறைகேடான முறையில் நடந்துகொள்வதும் நடைமுறைப்படுத்தப்பட்ட கட்டண அறவீடுகளை மீறி அதிகளவில் அறவீடு செய்வதாகவும்  மக்கள் தொடர்ந்து விசனம் தெரிவித்து வருகின்றனர்.

இவ்வாறான ஒரு முறைகேடான சம்பவம் கடந்தவாரம் எமது இணையதளத்தில் பதிவு செய்திருந்தோம்.

இன்று (20) வவுனியா யாழ்ப்பாண வழிக்கான பேரூந்தில் (NP 9012) நடைமுறைக்கு முரணான சம்பவம் இடம்பெற்றுள்ளது.வவுனியா தாண்டிக்குளத்திலிருந்து கனகராயன்குளத்திற்கு பயணித்த மூன்று பயணிகளிடம் வெவ்வேறான கட்டணங்கள் அறவீடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது -

பயணிகள் தமது பயணத்தை ஆரம்பித்து நிறைவு செய்த இடம் ஒன்றாக இருக்கின்றபோது கட்டணத்தில் மாற்றம் எவ்வாறுள்ளது என நடத்துனரிடம் பயணிகள் வினவியவேளை, குறித்த நடத்துனர் தவறான வார்த்தைப் பிரயோகங்களை பிரயோகித்ததாக, இச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பயணிகள் எமது இணையத்திற்கு முறையிட்டுள்ளனர்.

மேற்படி சம்பவம் தொடர்பில் சம்மந்தப்பட்ட திணைக்கள அதிகாரிகள் கவனம் எடுக்கவேண்டும், இவ்வாறான சம்பவங்கள் இனிவரும் காலத்தில் தவிர்க்கப்படவேண்டும்.தவறும் பட்சத்தில் மக்கள் வீதியில் இறங்கி போராடவேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.



No comments