Header Ads

test

டிப்பர் வாகனம் பனை மரத்துடன் மோதி விபத்து - வவுனியாவில் சம்பவம்.!!!

டிப்பர் வாகனம் பனை மரத்துடன் மோதி விபத்து - வவுனியாவில் சம்பவம்.!!!

இன்று (08) வவுனியா மடுகந்தை பகுதியில் டிப்பர் வாகனம் மரத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ் விபத்தால் வாகன சாரதி படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவது -
மணல் ஏற்றிக்கொண்டு ஹெப்பற்றிகொலாவ யானுஓயா பகுதியிலிருந்து வவுனியா நோக்கிச் சென்ற  டிப்பர் வாகனம் மடுக்கந்தை தேசிய பாடசாலைக்கு அண்மையாக விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த சம்பவமானது சாரதியின் தூக்கம் காரணமாகவே வாகனம்  கட்டுப்பாட்டை இழந்து பனை மரத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் காயமுற்ற  சாரதி படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பில்  மேலதிக விசாரணைகளை மடுக்கந்தை பொலிஸார் விசாரணைகளை  முன்னெடுத்துள்ளனர்.

No comments