Header Ads

test

முல்லைத்தீவு நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் பெளத்த மத துறவியின் உடலம் தகனம் தொடர்பில் குழப்ப நிலை முடிவுக்கு வந்துள்ளது.!!!

முல்லைத்தீவு நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தில்  பெளத்த மத துறவியின் உடலம் தகனம் தொடர்பில் குழப்ப நிலை முடிவுக்கு வந்துள்ளது.!!!

முல்லைத்தீவு நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் சட்டத்திற்கு முரணான முறையில் தங்கியிருந்த பெளத்த மத துறவி உயிரிழந்துள்ளார்.

இந்  நிலையில் பெளத்த மத துறவியின் உடலத்தை  ஆலய வளாகத்தினுள் புதைப்பதற்கு பலர் அழுத்தங்களை பிரயோகித்து  வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவது - அதிகளவான சிங்கள மக்கள் அப்பகுதிக்கு வருகை தந்து பௌத்த மத துறவியின் உடலத்திற்கு  வணக்கம் செலுத்தியுள்ளனர்.

இவ் வணக்க நிகழ்வின் போது  பிள்ளையார் ஆலய வளாகத்தினுள் நிறைந்திருந்த தமிழ் மக்களுடன் வார்த்தைப் பிரயோகத்தில் ஈடுபட்டுள்ளனர்.சம்பவ இடத்திற்கு ஞானசார தேரர் அவர்களும் வருகை தந்திருந்தார்.

பெருமளவான சிங்கள மக்கள் பெளத்த மத துறவியின் உடலத்தை நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தினுள்ளே அடக்கம் செய்வதற்கான முயற்சியில் ஈடுபட்டிருந்த நிலையில் -

இவ் விடயம் நீதி மன்றத்துக்கு சென்றதன்  அடிப்படையில்,  குறித்த உடலத்தை நீராவியடி பிள்ளையார் ஆலயத்திற்கு அருகிலுள்ள இராணுவ முகாமிற்கு அண்மையாகவுமுள்ள கடற்கரையில் தகனம் செய்யுமாறு முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்று உத்தரவு பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





No comments