வடமாகாண சபைக்கு முன் கண்ணீர் சிந்தும் சுகாதார தொண்டர்கள்.!!!

வடமாகாண சுகாதாரத் தொண்டர்கள் இன்று யாழ். கைதடியிலுள்ள வடக்கு மாகாண சபைக்கு முன் கண்ணீர் விட்டு கதறியழுது தமது கவனயீர்ப்புப் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
நாளைய (05) தினம் புதிதாக 456 சுகாதாரத் தொண்டர்களுக்கான நியமனம் அரசாங்கத்தால் வழங்கப்படவுள்ள நிலையில் குறித்த நியமனத்தில் முறைகேடுகள் காணப்படும் சந்தர்ப்பத்தில் குறித்த நியமனத்தை உடனடியாக இரத்துச் செய்யக் கோரியும், நீண்டகாலம் சுகாதாரத் தொண்டர்களாக கடமையாற்றி வரும் தம்மையும் இவ் நியமனத்தில் உள்வாங்கக் கோரியுமே இப் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.
இன்று காலை 09 மணி முதல் இப் போராட்டத்தில் வடக்கு மாகாணத்தை சேர்ந்த சுகாதாரத் தொண்டர்கள் கலந்து கொண்டுள்ளமையை அவதானிக்க முடிகின்றது.
குறித்த போராட்டத்தில் பல குடும்பப் பெண்கள் மிகுந்த இடர்பாடுகளுக்கு நடுவில் தமது குழந்தைகளுடன் இப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமை அனைவரையும் கண் கலங்க வைத்துள்ளது.
போராட்டத்தில் கலந்துகொண்டுள்ள சுகாதாரத் தொண்டர்கள் வடமாகாண ஆளுனர் கலாநிதி- சுரேன் ராகவனை நேரடியாகச் சந்தித்து தமது கோரிக்கைகளை முன்வைக்க உள்ளனர்.
குறித்த போராட்டத்திற்கு நீதி கிடைக்கப்பெறாத சந்தர்ப்பத்தில் இப் போராட்டம் தொடருமென அறிவித்துள்ளனர்.

Post a Comment