யாழ்.பல்கலைக்கழகத்திற்கு ஆட்சேர்ப்பு தொடர்பில் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ள டக்ளஸ் தேவானந்தா.!!!

யாழ். பல்கலைக்கழகத்தின் வேலை வாய்ப்புகளுக்கு வட மாகாணத்தைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்காமைக்கு காரணம் என்ன என பாரளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில் -
யாழ்.பல்கலைக்கழத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள ஆட்சேர்ப்பு பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளவர்கள் எந்த மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என உயர் கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
குறித்த விடயமானது இன்று (19) நாடாளுமன்றில் இடம்பெற்ற 27/2 நிலையியல் கட்டளையின் கீழான கேள்வி நேர விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் வடக்கைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்காமைக்கான காரணம் என்ன எனவும்,இது தொடர்பில் இவர்களுக்கான வேலை வாய்ப்புக்களை வழங்குவதற்க்கான நடவடிக்கை எடுக்க முடியுமா எனவும் கோரியுள்ளார்.
இவ் விடயம் குறித்து உயர் கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்கள் காத்திரமான பதிலினை வழங்கவேண்டுமென பா.உ டக்ளஸ் தேவானந்தா மேலும் தெரிவித்துள்ளார்.

Post a Comment