Header Ads

test

மட்டக்களப்பு மண்டூர் குடியிருப்புக்குள் யானைகள் புகுந்து அட்டகாசம்.!!!

மட்டக்களப்பு மண்டூர் குடியிருப்புக்குள் யானைகள் புகுந்து அட்டகாசம்.!!!


மட்டக்களப்பு மண்டூர் குடியிருப்புப் பகுதிகளில் யானைகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளது.

நேற்று நள்ளிரவு 12 மணியளவில் மண்டூர் பகுதிக்குள் புகுந்த யானைகள் சில வீடுகளில் உள்ள தென்னை மரங்களை மற்றும் பயன் தரு மரங்கள் போன்றவற்றை அழித்து சேதமாக்கியுள்ளது.

தமது குடியிருப்புக்குள்  யானையின் நடமாட்டத்தை அவதானித்த மக்களும்   இளைஞர்களுமாக ஒன்று கூடி யானைகளை மண்டூர் வாவி கரையோரமாக விரட்டிவிட்டனர்.

இவ்வாறு தொடர்ச்சியாக மக்கள் குடியிருப்பு பகுதிகளில் யானைகளின்அட்டகாசம் அதிகரித்து காணப்படுகின்றது.மற்றும்
விவசாய (விளை) நிலங்கள் பயன் தரும் மரங்கள் போன்றவை அழிக்கப்பட்டுள்ளமை அவனிதானிக்க முடிகிறது.

No comments