Header Ads

test

ரணிலின் ஆட்டம் ஆரம்பம்.!!!

ரணிலின்  ஆட்டம் ஆரம்பம்.!!!

இம் முறை நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக களம் இறக்கப்பட்டுள்ளார் சஜித் பிரேமதாசா.
இத் தேர்தலில் பாரியளவில்  வெற்றியடைந்து , நாடாளுமன்ற தேர்தலையும் வெற்றி கொள்வதற்காகவே ஜனாதிபதி வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாசவை பெயரிட்டதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அலரி மாளிகையில் இடம்பெற்ற சிவில் சமூக அமைப்பின் பிரதிநிதிகளுடான சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே இவ்வாறு  கூறியுள்ளார்.

நாம் நாடாளுமன்றத்தில் சிறுபான்மையாக இருந்துகொண்டு நாட்டில் பல்வேறு அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்தோம்.

ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்று ஜனாதிபதியையும், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை அதிகாரத்தையும் பெற்றுத் தந்தால், எம்மால் அபிவிருத்தித் திட்டங்களை துரிதப்படுத்த முடியும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

No comments