"எழுக தமிழும்- தியாக தீபம் திலீபனின் சிந்தனையும் - மக்கள் புரட்சி வெடிக்குமா".???...!!!

கடந்த கால தமிழ் மக்களின் வரலாறானது இருண்ட பக்கங்களைக் கொண்டது.
வார்த்தைகளால் சொல்லி முடிக்க முடியாதளவான உயிரிழப்புக்களையும் சொத்துழப்புக்களையும் சந்தித்த ஒரு இனமாக தமிழினம் காணப்படுகின்றது.
இருப்பினும் எது எப்படியோ இன்று தமிழ் மக்கள் சொல்லி முடிக்க முடியாதளவு அரசியல்,புவியியல் மற்றும் இன்னோரென்ன பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர்.
தமிழர்களின் காப்பரனாக விளங்கிய விடுதலைப் போராட்டம் மொளனித்த பின்பு,கண்ணை கட்டி காட்டில் விட்டதைப்போன்ற ஒரு சூழ் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
தமிழர்களின் தனித்துவமான அரசியல் அதிகாரங்கள் பறி போகாது தக்க வைத்துக் கொள்ளவென, தேசிய ரீதியிலான அமைப்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்பட்டு, மக்களின் ஏகோபித்த ஆதரவோடு பாராளுமன்றம் அனுப்பப்பட்டமை ஊரறிந்த உண்மையே.
இருந்தும், இருப்பவர்கள் இருக்கும் போது தம்மை தேசியவாதிகளாக காட்டிக்கொண்டவர்கள், இன்று கச்சையை வரிந்து கட்டிக்கொண்டு தரகர்களாக மாறி தம்பட்டம் அடிக்கும் செயற்பாட்டை செவ்வனேவே செய்து வருகின்றனர்.
"பனையால் வீழுந்தவனை மாடேறி மிதிப்பதுபோல்" துன்பட்ட மக்களை அதிலிருந்து மீட்டு ஒரு ஆரோக்கியமான சமூகமாக வாழ வழியமைக்காது, மீண்டும் மீண்டும் அகழிக்குள் தள்ளுகின்ற கைங்கரியத்தை நிகழ்த்தி வருகின்றனர்.
தமிழ் மக்களை செவிடர்களாக நினைத்து ஒரே ராகத்தில் பத்துவருடமாக பறை அடித்து வருகின்றனர்.
குறிப்பாக சொல்லப் போனால் -
* காணாமல் ஆக்கப்பட்டோர் விடயம்
* காணி அதிகாரம்
* பொலிஸ் அதிகாரம்
* அரசியல் கைதிகளின் விடுதலை
* இராணுவம் கையகப்படுத்தியுள்ள காணிகள் மீட்பு.
இதைப்போன்ற இன்னும் சில விடயங்கள் மாத்திரமே " சாத்தான் காதில் வேதம் ஓதியதைப் போல்" ஓதப்பட்டு வருகிறது.
தங்களுடைய தனிப்பட்ட சுயநலத்திற்க்காக ஒரு இனத்தை கூறுபோட்டு விற்க்கின்ற வியாபாரத்தை "பிச்சைக்காரன் புண்ணைக் காட்டி பிழைப்பதைப்போல் பிழைத்து வருகிறார்கள்.
வட பகுதியில் பல குடும்பங்கள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டு ஒரு நாளைக்கூட கழிப்பதென்பது "கல்லில் நார் உரிப்பதை" ஒத்து நிற்கின்றது.
இவர்களின் அடிப்படை தேவைகளை நிறைவு செய்ய மாற்றினத்தவரிடம் கை ஏந்தும் நிலையை இல்லொதொழிக்க முயற்சி செய்தார்களா...??
இளைஞர் யுவதிகளுக்கான வேலையில்லா பிரச்சினை என்பது பெரும் அதிர்வலைகளை எழுப்பியுள்ளது.இதனால் குற்றச் செயல்கள் அதிகரிப்புக்கும் காரணமாக அமைந்து விடுகின்றது.
பல தொழில் பேட்டைகள் செயலிழந்து காணப்படுகின்றது, அவற்றை மீள புனரமைப்பது அல்லது புதிதாக தொழில் பேட்டைகளை நிறுவுவதால் குறைந்தளவேனும் வேலையில்லா பிரச்சினையை தீர்க்க முடியும்.
இதற்க்காக முயற்சித்தார்களா என்றால் அது கேள்விக் குறியாகவே காணப்படுகின்றது.
இவர்களின் இவ்வாறான செயற்பாடுகள் "உரோம் நகரம் பற்றி எரிகின்ற போது மன்னன் பிடில் வாசித்த கதையாக அமைந்துள்ளது.
இதுவரை தமிழ் மக்களின் பிரச்சினைகளை எவற்றையேனும் பெற்றுக்கொடுக்காது தனியே தேசியத்தையும் தமது வங்கி கணக்கையும் ஊதிப்பெருப்பிக்கின்ற நிகழ்வையே நிகழ்த்தி வருகின்றனர்.
தமிழ் தேசிய வீரர்கள் திருவிழாக் காலங்களில் மட்டும் மக்களின் வீட்டுப்படலையை தட்டி வாக்கு வங்கிகளை நிரப்புவதும்,பின்பு வாக்களித்தவர்கள் வாசல் படி ஏறிச் செல்லும் போது, காலுக்கு மேல் கால் போட்டு செய்தித்தாள் வாசிப்பதும்,அரசாங்கத்துடன் பேச்சு நடத்தியுள்ளோம் வருகின்ற தீபாவளி மட்டும் பொறுத்திருங்கள் தீர்வை பெற்றுத்தருவோம் என ""குழந்தைப்பிள்ளைக்கு நிலாவை காட்டி சோறூட்டுவது போன்று நாட்களை கடத்துவதும் பழக்கப்பட்டதொன்றாகி விட்டது.
வலியால் துடித்துக்கொண்டிருக்கும் மக்களின் மனங்களை புண்படுத்தும் செயற்பாடு ஓய்ந்ததாய் இல்லை.
ஒவ்வொருவரும் தங்களின் கட்சிகளை வளர்ப்பதிலேயே குறியாக உள்ளார்களே தவிர, தமிழ் மக்களின் பிரச்சினைகளை கண்டும் காணாமல் இருக்கின்றனர்
இது இப்படி இருக்க முன்னாள் வடமாகாண சபை முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் அவர்கள் புதிதாக கட்சி ஒன்றை ஆரம்பித்துள்ளார்.
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுத்தருவதாகவும் அதற்க்கான முயற்சிகளை முன்னெடுப்பேனேன்றும் மக்களின் ஆதரவை திரட்டி வருகிறார்.
தமிழர்களின் உரிமைகளை வென்றெடுக்க வேண்டும் என்றும், அதற்க்கான ஆரம்ப கட்ட வேலைகளை முன்னெடுத்துள்ளதையும் காணமுடிகிறது.
இதன் நிழலாக "எழுக தமிழ்" மக்கள் எழுச்சி போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளன.
தமிழ் மக்களை ஒரு குடையின் கீழ் ஒன்றாக்கி தனித்துவமான ஒரு சமூகமாக மாற்றவேண்டும் என்ற நோக்கிலே இப் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றாத என்ற கேள்வி பலர் மத்தியில் எழுந்துள்ளது.
"தியாக தீபம் திலீபனின் மக்கள் புரட்சி வெடிக்கட்டும்" என்ற சிந்தனை தற்போது கனிந்து வருகிறதா என்று எண்ணத் தோன்றுகின்றது.
"நடப்பவை நன்மையாக இருந்தால் தமிழர்களின் பல பிரச்சினைகளுக்கு தீர்வு கிட்டும்."
அதாவது இவற்றை அடிப்படையாக வைத்து
எழுக தமிழ் மக்கள் எழுச்சிக்கான விழிப்புணர்வு பரவலாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதற்கமைய இன்று (11) எழுக தமிழ் மக்கள் எழுச்சி போராட்டத்திற்காக, மக்களை அணி திரட்டும் விழிப்புணர்வு பேரணி ஒன்று வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டது.
இவ் நிகழ்வானது வவுனியா நகரை அண்டிய பகுதிகள் மற்றும் பேருந்து நிலையங்கள், சனநடமாட்டம் உள்ள பகுதிகள் அத்துடன் செட்டிகுளம் பகுதிகளிலும் இவ் பிரச்சார நடவடிக்கை வவுனியா மாவட்ட ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி மற்றும் தமிழ்மக்கள் கூட்டணியினரால் இன்று காலை 9மணியிலிருந்து மாலை 3.30மணி வரையும் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
குறித்த நிகழ்வில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், அரசியல் கைதிகளின் உறவினர்கள், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் உறுப்பினர்கள், தமிழ் மக்கள் கூட்டணியின் வவுனியா மாவட்ட உறுப்பினர்கள் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment