யாழ்.மறவன்புலவு காற்றாலை விடயம் தொடர்பில் ஆளுநரின் கவனம் - மக்கள் பிரதிநிதிகளுடன் சந்திப்பு.!!!

கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களுக்கும் மறவன்புலவு பிரதேச மக்களின் பிரதிநிதிகளுக்குமிடையிலான சந்திப்பு கைதடியில் அமைந்துள்ள முதலமைச்சர் அமைச்சின் செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.
மறவன்புலவு மக்கள் குடியிருப்பு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மின்காற்றாலைக்கு எதிராக மறவன்புல மக்களால் இன்று முதலமைச்சு செயலகத்தின் முன்னால் மேற்கொள்ளப்பட்ட கவனயீர்ப்பு போராட்டத்தையடுத்து கௌரவ ஆளுநர் அவர்கள் பிரதேச மக்களின் பிரதிநிதிகள் ஐவர் மற்றும் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர், நகர அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகள் பிரதேச செயலாளர் மற்றும் பிரதேச சபை தவிசாளர் ஆகியோருடன் கலந்துரையாடப்பட்டது.
இக் கலந்துரையாடலின் போது அமைக்கப்பட்டுள்ள மின்காற்றாலை தொடர்பில் ஆராய்ந்ததுடன் இதுதொடர்பிலான பேச்சுவார்த்தை இலங்கை மின்சார சபையுடன் மேற்கொள்ள தீ;ர்மானித்துள்ளதாகவும் எதிர்வரும் 24ஆம் திகதி இது தொடர்பிலான கலந்துரையாடல் நடைபெறும் எனவும் தெரிவித்தார்.
மேலும் இந்த காற்றாலைகளை வேறு இடங்களில் அமைப்பதற்குரிய பகுதியை பிரதேச சபை கண்டறிந்து குறிப்பிடவேண்டும் என்றும் கௌரவ ஆளுநர் அவர்கள் குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment