Header Ads

test

"நாட்டுக்காக ஒன்றிணைவோம்"எனும் செயற்திட்டதின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் அவர்களால், யாழில் விவசாய உபகரணங்கள் கையளிப்பு.!!!

"நாட்டுக்காக ஒன்றிணைவோம்"எனும் செயற்திட்டதின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் அவர்களால், யாழில் விவசாய உபகரணங்கள் கையளிப்பு.!!!

யாழ்.சாவகச்சேரி பிரதேச செயலகத்தில் "நாட்டுக்காக ஒன்றிணைவோம்"எனும் செயற்திட்டதின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் அவர்களால், தேசிய உணவு உற்பத்தி செயற்திட்டத்தின் மூலம் யாழ் மாவட்டத்தில் விவசாய உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவது -

யாழ் மாவட்டத்தில் உற்பத்தியினை  ஊக்குவிக்கும் வகையில்  தொடர்ச்சியாக விவசாயிகளை ஊக்குவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இவ் விடயம் தொடர்பில் 55 விவசாயிகளுக்கு நீர் இறைக்கும் இயந்திரங்களும், இஞ்சி செய்கையினை ஊக்குவிக்கும் முகமாக 200 விவசாயிகளுக்கு இஞ்சி உற்பத்தி பொருட்களும் மற்றும் மல்டி சொப்பர் போன்றனவும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

மேலும், தூவல் நீர்ப்பாசன செய்கையை ஊக்குவிக்கும் வகையில்  5 விவசாயிகளுக்கு தூவல் நீர்ப்பாசனத்திற்க்கான பொருட்களும், 2 புல்லு வெட்டும் இயந்திரங்களும் வழங்கி வைக்கப்பட்டுட்டுள்ளன.

இவ்வாறான செயற்பாடுகள் தொடர்ச்சியாக பா.உ அங்கஜன் இராமநாதன் அவர்களால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை சிறப்பம்சமாகும்.அத்தோடு யாழ் மாவட்டத்தில் விவசாய செயற்பாட்டை ஊக்குவிப்பதன் மூலம், தன்னிறைவான பொருளாதாரத்தை ஈட்ட முடியுமென்பது நிதர்சனமாகும்.




No comments