Header Ads

test

கிளிநொச்சியில் பாடசாலை ஒன்று விசமிகளால் தீ வைத்து எரிப்பு.!!!

கிளிநொச்சியில் பாடசாலை ஒன்று விசமிகளால் தீ வைத்து எரிப்பு.!!!

கிளிநொச்சி கோணாவில் பாடசாலை அலுவலகம் இனம்தெரியாதவர்களால் தீ வைத்து  ஆவணங்கள் யாவும் நாசமாக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவமானது  இன்று (13) அதிகாலை வேளை  இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது - இன்று காலை  6.30 க.பொ.த சதாரண தர மாணவர்களுக்கான விசேட வகுப்பிற்க்காக மாணவர்கள் பாடசாலைக்கு சென்ற வேளையிலேயே இச் சம்பவம் தெரியவந்துள்ளது.

சம்பவம் இடம்பெற்ற பாடசாலையின் அதிபர் அலுவலகத்திற்குள்லிருந்து, புகை வெளியேறுவதனை அவதானித்த மாணவர்கள் குறித்த விடயத்தை ஆசிரியர் ஒருவருக்கு  அறிவித்துள்ளனர்.

அதிபர் அலுவலகத்தின் கதவு உடைக்கப்பட்டுள்ளதுடன் விசமிகள் மண்ணெண்ய் ஊற்றி தீ வைத்திருக்கலாம் என  பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இச் சம்பவத்தில் சில முக்கிய ஆவணங்கள் பாதுகாப்பாக மீட்க்கப்பட்டுள்ளதுடன்,
கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளர், கரைச்சிக் கோட்டக் கல்வி அதிகாரி ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்று நேரடியாக நிலைமைகளை அவதானித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் -

மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.







No comments