Header Ads

test

திருகோணமலைலையில் இராணுவ வாகனம் மோதி இருவர் படுகாயம்.!!!

திருகோணமலைலையில் இராணுவ வாகனம் மோதி இருவர் படுகாயம்.!!!

திருகோணமலை- கந்தளாய் தம்பலகாமம் பகுதியில் இராணுவ வாகனம் முச்சக்கர வண்டியின் ஒன்றை மோதித் தள்ளியதில்  இருவா் படுகாயமடைந்துள்ளனர்.

கந்தளாயிலிருந்து திருகோணமலை நோக்கி சென்று கொண்டிருந்த வாகனம், முச்சக்கர வண்டியை  மோதியதினாலேயே குறித்த விபத்து நிகழ்ந்துள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவது -

முச்சக்கரவண்டியில் பயணித்த இருவரும் 52 வயதுடைய சித்தரவேல் லோகராணி மற்றும் 54 வயதுடைய முருகேசு சித்தரவேல் என அறிய முடிகிறது.

இவ் விபத்தை ஏற்படுத்திய இராணுவ வாகனத்தின் சாரதியை கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரனைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments