Header Ads

test

11.09.2019 இன்றைய நாள் எப்படி.!!!

11.09.2019 இன்றைய நாள் எப்படி.!!! 


மேஷம்.
நம்பிக்கை தான் வாழ்க்கை என்பதை உணர்வீர்கள். கடினமான சூழல்களிலிருந்து விடுபடுவீர்கள். நேர்மை மற்றும் வெளிப்படைத்தன்மையுடன் இருப்பதன் மூலம் பல்வேறு இன்னல்களை தவிர்க்கலாம் என்பதை உணர்வீர்கள்


ரிஷபம்.
நிதிவிவகாரங்களில் அகலக்கால் வைக்காமல் இருப்பது நல்லது. உங்களது தனித்தன்மை விரைவில் வெளிப்படும். கணவன்- மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். கேளிக்கை விவகாரங்களில் அதிக நாட்டம் கொள்ளாமல் இருப்பது நல்லது.


மிதுனம்.
மன சஞ்சலத்தால் அவதிப்படுவீர்கள். செய்யும் செயல்களில் அதிகளவில் தடைகள் ஏற்படும் என்பதால், அதிக ஈடுபாடு அவசியம். நிதானம் காப்பது நல்லது.


கடகம்.
தொழில்துறை மற்றும் எதிர்கால விவகாரங்களில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். தோல்வி ஏற்பட்டாலும் மனம் தளராது இது இறுதி நான் வெற்றி பெறுவது உறுதி என்ற மனநிலை ஏற்படும். வாழ்க்கையை வளமாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவீர்கள்.


சிம்மம்.
மன சஞ்சலம் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் தியானம் உள்ளிட்ட மனவளக்கலை பயிற்சிகளில் ஈடுபடுவது நல்லது. கடந்தகால செயல்கள் குறித்து கவலைப்படுவீர்கள். அடுத்த வாய்ப்புக்காக காத்திருந்து அதில் வெற்றி பெற துணிவீர்கள்.


கன்னி.
கிரகங்களின் சாதகமான பார்வையினால், நீண்ட காலமாக மனதை வாட்டிவந்த குடும்ப உறுப்பினர்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். அதிக கோபம் தவிர்ப்பது நல்லது. மற்றவர்களின் ஆலோசனைகள் தக்க சமயத்தில் உதவும், மறவாமல் ஏற்றுக்கொள்ளவும்.


துலாம்.
வழக்கமான விஷயங்களிலிருந்து விலகிச்செல்வீர்கள். எதை இன்றே முடிக்கவேண்டும் என்பதை உணர்ந்து திட்டமிட்டு அதற்கேற்ப செயல்படுவீர்கள். பக்தி மார்க்கம் மனசஞ்சலத்தை தவிர்க்கும் என்பதால், அதில் ஈடுபாடு காட்டுவது நல்லது.


விருச்சிகம்.
திருப்திகரமான நாள். மற்றவர்களையும் ஒருங்கிணைத்து ஊக்குவிப்பீர்கள். எது செய்யத்தக்கது எது செய்யக்கூடாதது என்பதை பிரித்து காண்பீர்கள். உங்கள் அணியுடன் இணைந்து வெற்றி காண்பீர்கள்.


தனுசு.
கூட்டத்தில் இருந்தாலும், தனியாக இருப்பதை போன்று உணர்வீர்கள். பணிவிவகாரங்களில் உங்களின் கருத்துகளுக்கு உரிய மரியாதை கிடைக்கும். உங்களின் அனுபவங்கள், மற்றவர்களுக்கு சிறந்த வழிகாட்டியாக திகழும்..


மகரம்.
கிரகங்களின் சாதகமான பார்வையினால் எண்ணிய காரியங்கள் தடையின்றி நடைபெறும். விடுமுறைக்காக திட்டமிடுவீர்கள். வெளிநாட்டு நண்பர்களுடன் நட்பு பாராட்டுவீர்கள். வீட்டுக்குதேவையான பொருட்களை வாங்குவீர்கள்.


கும்பம்.
நிதிவிவகாரங்கள் திருப்தி தரும். மற்றவர்களுக்காக சில விஷயங்களில் மாறுதல் செய்வீர்கள். கடந்தகால அனுபவங்களிலிருந்து நிறைய கற்றுக்கொள்வீர்கள். பல்வேறு விவகாரங்களுக்கு பொறுப்பு ஏற்பீர்கள்.

மீனம்.
நிதி விவகாரங்கள் திருப்தியளிக்கும். உங்களின் கருத்துகளுக்கு மற்றவர்கள் மதிப்பு அளிப்பார்கள். விருந்து விசேஷங்களில் பங்கேற்பீர்கள்.

No comments