Header Ads

test

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் பலாலி விமான நிலையம் தொடர்பான கலந்துரையாடல் யாழில்.!!!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில்
பலாலி விமான நிலையம் தொடர்பான கலந்துரையாடல் யாழில்.!!!



யாழ்ப்பாணம் பலாலியில் அமைந்து காணப்படும் விமானத் தளம் குறித்த கலந்துரையாடல் இன்று காலை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெற்றுள்ளன.

இவ் கலந்துரையாடலில்  தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா மற்றும் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

மேலும் இவ் கலந்துரையாடலில் சிவில் விமான சேவைகள் மற்றும் துறைமுகங்கள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவும் சுற்றுலாத்துறை அமைச்சர் ஜோன் அமரதுங்கவும் இந்த சந்திப்பில் பங்கேற்றிருந்தனர்.

இக் கலந்துரையாடல் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது -

பலாலி விமான நிலையத்தை நவீன மயப்படுத்துவதன் ஊடாக ஆரம்ப கட்டமாக மத்திய கிழக்கு நாடுகள்  மற்றும் இந்தியா போன்ற நாடுகளுக்கான விமான சேவைகளை ஆரம்பிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டதாக தெரியவருகிறது.
விமான நிலையத்தின் மேலதிக நவீன மயப்படுத்தல் வேலைத்திட்டங்கள் இந்தியாவின் உதவியுடன் இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.


No comments