இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் விரைவில் பேச்சுவார்த்தை - தமிழ்தேசியக் கூட்டமைப்பு.!!!

தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக இந்திய அரசாங்கத்துடன் கலந்துரையாடுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் குழுவொன்று மிக விரைவில் புதுடெல்லிக்குப் பயணமாகவுள்ளது.
இப் பயணத்தின் போது இனப்பிரச்சினைக்கான தீர்வு மற்றும் தமிழ் மக்கள் எதிர்கொண்டுள்ள சமகாலப் பிரச்சினைகள் தொடர்பில் இந்திய பிரதமருடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கலந்துரையாட உள்ளது.
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களை அடுத்து,
இலங்கையின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேசத்திற்கு வெளிப்படுத்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி மாலைதீவுக்கு சென்றுவரும் வழியில் நான்கு மணித்தியால அவசர விஜயமொன்றை இலங்கைக்கு மேற்கொண்டிந்தார்.
இலங்கைக்கு விஜயம் செய்த பிரதமர் நரேந்திர மோடி ஜனாதிபதி, பிரதமர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போன்றவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.
இவ் விஜயத்தினுடைய நேரம் போதாமையால் கூட்டமைப்புடன் சினேகபூர்வமான சந்திப்பொன்றை மாத்திரமே இந்திய பிரதமரால் நடத்த முடிந்துள்ளது. விரிவான பேச்சுக்களை நடத்த புதுடெல்லிக்கு வருமாறு அழைப்பு விடுத்திருந்தார்.
பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை அடுத்தே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விரைவில் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளது.
கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், மாவை சேனாதிராஜா, சிவஞானம் சிறிதரன், சித்தார்த்தன் உட்பட பலர் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளனர்.
இந்தியப் பிரதமரிடம், தேசிய பிரச்சினை தொடர்பாக இலங்கை அரசாங்கம் அனைத்துலக சமூகத்துக்கு அளித்த உறுதிப்பாட்டை பேணுவதை உறுதி செய்வதில் இந்தியா இன்னும் தீவிரமான பங்கை வகிக்க வேண்டும். போன்ற விடயங்களை கலந்துரையாடவுள்ளதாக அறியமுடிகிறது.

Post a Comment