Header Ads

test

யாழ்ப்­பா­ணக் குடா­நாட்­டில் ஏற்பட்டுள்ள குடிதண்ணீர்ப் பிரச்­சி­னைக்கு தீர்வு.!!!

யாழ்ப்­பா­ணக் குடா­நாட்­டில் ஏற்பட்டுள்ள குடிதண்ணீர்ப் பிரச்­சி­னைக்கு தீர்வு.!!!



யாழ்ப்­பா­ணக் குடா­நாட்­டில் ஏற்பட்டுள்ள குடிதண்ணீர்ப் பிரச்­சி­னைக்கு தீர்த்துவைக்கும் முகமாக ஏற்படுத்தப்­பட்­டுள்ள மாற்றுக் குடி­நீர்த் திட்­டத்திற்க்கான  வேலைகள் எதிர்­வ­ரும் 30ம் திகதி ஆரம்­பிக்கப்ப­ட­வுள்­ளன.

குறித்த வேலைத்திட்டத்தை ஜனாதிபதி மைத்­தி­ரி­பால சிறி­சேன அவர்கள் ஆரம்­பித்து வைக்­க­வுள்­ளார்.

2018 ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் ஆரம்­பித்து இந்த வருடம் ஓகஸ்ட் மாதம் நிறை­வு செய்யப்படவேண்டிய இத் திட்­டம் வன­ உ­யி­ரி­கள் திணைக்­க­ளத்­தின் தலையீடு காரணமாக ஓராண்டு தாம­த­மாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

நாட்டிற்காக ஒன்றினைவோம் செயற்திட்டத்தின் மூலமாக ஜனாதிபதி அவர்களால் இவ் குடிநீர் திட்டப் பணிகள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.

யாழ்ப்­பா­ண மாவட்டத்தில் குடி­தண்­ணீர்ப் பிரச்­சினை நீண்ட காலமாக அனைவராலும் கவனத்தில்கொள்ளப்பட்ட ஒரு விடயமாகும்.அதற்­குப் பல்­வேறு தீர்­வு­க­ளும் முன்­வைக்­கப்­பட்­டன.

இர­ணை­ம­டு­வி­லி­ருந்து குடி­தண்­ணீ­ரைக் கொண்­டு­ வ­ரு­தல், வட­ம­ராட்சி கிழக்­கி­லி­ருந்து கடல் நீரை நன்­னீ­ராக்­குதல் உள்ளிட்ட பல்­வேறு திட்­டங்­கள முன்­மொ­ழி­யப்­பட்­ட­போ­தும், அதி­லுள்ள அர­சி­யல் இழு­ப­றி­கள் கார­ண­மாக எந்­த­வொரு திட்­ட­மும் இன்னும் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை என்பது மனவருத்தமான விடயமாகும்.

இந் நிலை­யில் ‘மாற்­றுக் குடி­நீர்த் திட்­டம்’ என்ற தொனிப்பொருளில் வட­ம­ராட்சி நீரே­ரி­யில் உள்ள நீரை குளத்­தில் தேக்கி விநி­யோ­கிக்­கும் திட்­டம் தயா­ரிக்­கப்­பட்­டது.
2 ஆயி­ரம் மில்­லி­யன் ரூபா செல­வில் இந்­தத் திட்­டம் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­ட உள்­ளமை குறிப்பிடத்தக்கது.

No comments