Header Ads

test

நல்லூர் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் மணிமண்டபத்தில் இடம்பெற்ற பஜனை நிகழ்வில் வயோதிபர் ஒருவரின் சேட் பொத்தானை சீர் செய்த பொலிஸ் உத்தியோகத்தர்.!!!

நல்லூர் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் மணிமண்டபத்தில் இடம்பெற்ற பஜனை நிகழ்வில் வயோதிபர் ஒருவரின் சேட் பொத்தானை சீர் செய்த பொலிஸ் உத்தியோகத்தர்.!!!


நல்லூர் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் மணிமண்டபத்தில் பஜனை நிகழ்வு நடைபெற்றுக்கொண்டிருந்தது.
அதே  சந்தர்ப்பத்தில் அவ்விடத்தில்  கடமையில் நின்ற பொலிஸாரும் அதனைப் பார்வையிட்டுக் கொண்டிருந்தனர்.

குறித்த இடத்திற்கு வந்த வயோதிபர் ஒருவரும் பஜனையை நின்றபடி ரசித்துத் தாளம் போட்டவண்ணம் இருந்தார்.

அவ் வயோதிபரைக் கவனித்த பொலிஸாரில் ஒருவர் அவரது சேட் பொத்தான்கள் ஒழுங்கற்றுப் பொத்தானிடப்பட்டதை அவதானித்து அதைச் சைகையாற் சொன்னார். அது அந்த வயோதிபருக்கு விளங்கவில்லை.அதனால் வயோதிபர் பேசாமல் நின்றார்.

சற்று நேரத்தில் அப் பொலிஸ் உத்தியோகத்தர்  அவர் அருகிற் சென்று அவரே அப் பொத்தான்களைச் சீர்செய்ததை
அவதானிக்க முடிந்தது.
இதனை கண்ணுற்ற அனைவரும் அவ் உத்தியோகத்தருக்கு நன்றி தெரிவித்தனர்.மனிதம் வாழட்டும்....


No comments