Header Ads

test

உயிரிழந்த அனைவரும் நினைவு கூரப்பட வேண்டியவர்கள் என வலியுறுத்துகிறார் - செயளாலர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா.!!!

உயிரிழந்த அனைவரும் நினைவு கூரப்பட வேண்டியவர்கள் என வலியுறுத்துகிறார் - செயளாலர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா.!!!


வரவுள்ள ஆட்சியில் தனக்கு தமிழ் மக்கள் அதிகளவு அரசியல் அதிகாரத்தை தருவார்களேயானால் நிச்சயமாக முள்ளிவாய்க்கால் வரை நடைபெற்ற இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்ட சகல மனித உயிர்களுக்கும் மரியாதை செலுத்தும் வகையில் பொதுச் சதுக்கத்தையும் அதற்கான ஒரு நினைவு நாளையும் உருவாக்குவேன் என ஈழ மக்கள் ஜனநாயகக்  கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்திள்ளார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்றையதினம் நடைபெற்ற  ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.


உசுப்பேற்றல்களாலும் விரோதங்களை தூண்டிவிடுவதாலும் எதனையும் சாதிக்க முடியாது. அத்துடன் புலிகள் அமைப்பும் எமது மக்கள் தான் அவர்கள் வேற்றுக் கிரகத்தில் இருந்து வந்தவர்கள் அல்ல. எனவே அவர்களும் நினைவு கூரப்பட வேண்டியவர்களே என சுட்டிக்காட்டினார்.

அத்துடன் இது போன்ற நல்லெண்ண சமிக்ஞைகளே இன நல்லிணக்கத்தை தோற்றுவிக்கும். அதுமட்டுமல்லாது எமது மக்களின் அபிலாசைகள் குறித்து எதிர் வரும் ஜனாதிபதித் தேர்தலில் வெல்லப்போகின்ற கோட்டாபாய ராஜபக்ச அவர்களுடன் நாம் மனம் திறந்து பேசியதில் எமக்கு நம்பிக்கை தரும் சமிஞ்ஞைகள் கிடைத்திருக்கின்றன. என்னை நான் செய்வேன். செய்விப்பேன் என டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மேலும் தெரிவித்தார்.

No comments