யாழ். போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் மருத்துவ சேவையாளர்களின் தொலைபேசிகளைத் திருடிய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.!!!

வைத்தியசாலைப் பாதுகாப்பு உத்தியோகத்தர்களால் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
யாழ். போதனா வைத்தியசாலையில் கடந்த ஒருவாரத்துக்குள் மருத்துவ சேவையாளர்கள் இருவரின் தொலைபேசிகள் திருட்டுப் போயிருந்தன.
வெளிநோயாளர் பிரிவின் மருந்தகத்தில் பணியாற்றும் மருந்தாளர் ஒருவரின் தொலைபேசி திருட்டுப்போயிருந்தது.
கடந்த சனிக்கிழமை 10வது நோயாளர் விடுதியில் மருத்துவர் ஒருவரின் தொலைபேசியும் திருட்டுப் போயிருந்தது.
இந்தச் சம்பவங்களையடுத்து வைத்தியசாலைப் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் உஷார் அடைந்தனர்.
மருத்துவ சேவையாளர்கள் இருவரினது தொலைபேசிகளையும் திடிய அதே இளைஞன் இன்று 27வது விடுதியில் கடமையாற்றும் தாதிய உத்தியோகத்தரின் தொலைபேசியை திருடிக்கொண்டு தப்பி ஓடிய போது பாதுகாப்பு உத்தியோகத்தர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டார்.
திருநெல்வேலியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு பிடிக்கப்பட்டார். அவர் மேலதிக விசாரணைகளுக்காக யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

Post a Comment