யாழ்ப்பாணம் செம்மணி வீதியில் நல்லூர் வரவேற்கின்றது எனும் வளைவுக்கான அடிக்கல் நாட்டுவிழா இன்று காலை சுப நேரத்தில் இடம்பெற்றுள்ளது.!!!
யாழ்ப்பாணம் செம்மணி வீதியில் நல்லூர் வரவேற்கின்றது, வளைவுக்கான அடிக்கல் நாட்டுவிழா இன்று காலை சுப நேரத்தில் இடம்பெற்றுள்ளது.!!!
ஏ9 பிரதான வீதியை இணைக்கும் செம்மணி வீதியில், 6 மில்லியன் ரூபா நிதியில் நல்லூர் வரவேற்கின்றது வளைவு நிர்மாணிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறித்த வளைவுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று காலை சுப நேரத்தில் இடம்பெற்றது.குறித்த நிகழ்வில்
அடிக்கல்லினை கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் அவர்களால் நாட்டி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில், யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் இமானுவல் ஆனல்ட், ஆணையாளர் த.ஜெயசீலன், நல்லூர்,கோப்பாய் பிரதேச செயலாளர்கள், நல்லூர்,கோப்பாய் பிரதேச சபை தவிசாளர்கள் மற்றும் செயலாளர்கள், கல்விக் காருண்யன் ஈ.எஸ்.பி.நாகரத்தினம், என பலரும் பங்கெடுத்திருந்தனர்.
அடிக்கல் நாட்டும் நிகழ்வின் கிரியைகள் நல்லூர் ஆலய பிரதமகுரு வைகுந்தவாசக் குருக்கள் தலைமையில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
தமிழர்களின் புராதன இடங்கள் சுரண்டப்பட்டுக் கொண்டிருக்கின்ற சந்தர்ப்பத்தில், தமிழர் பாரம்பரியத்தை எடுத்தியம்பக்கூடிய வகையில் குறித்த வளைவு அமையும் எனவும், இவ்வாறான செயற்பாடுகள் மக்களின் மனங்களில் தனியாக ஒரு இடத்தை பிடித்துள்ளதாகவும் கல்வியலாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மேலும் -
கன்னியா வெந்நீரூற்று போன்ற சம்பவங்களில் நொந்து போயுள்ள மக்களின் மனங்களில் இச் செயற்பாட்டின் மூலம் பால் வார்த்த சம்பவமொன்றை கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் அவர்கள் நிகழ்த்தி உள்ளதாக சமூக ஆர்வாலர்கள் பலரும் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.

Post a Comment