Header Ads

test

கிளிநொச்சி உருத்திரபுரம் பகுதியில் தொடர் திருட்டுச்சமபவங்களில் ஈடுபட்டவர்கள் கைது.!!!

கிளிநொச்சி உருத்திரபுரம் பகுதியில் தொடர் திருட்டுச்சமபவங்களில் ஈடுபட்டவர்கள் கைது.!!!


கிளிநொச்சி உருத்திரபுரம் பகுதியில் தொடர் திருட்டுச்சமபவங்களில் ஈடுபட்ட குழுவொன்றை கிராம மக்கள் ஒன்று கூடி மடக்கி பிடிக்கப்பட்டு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று கிளிநொச்சி உருந்திரபுரத்தில் நிகழ்ந்துள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது -

கடந்த சில நாட்களாக கிளிநொச்சி உருத்திரபுரம் பகுதியில் இரவுவேளைகளில் திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து இடம்பெற்று வந்ததை அவதானிக்க முடிந்தது.

குறித்த பகுதியில் நான்கு நாட்களுக்கு முன் பெண் ஆசிரியர் ஒருவரின் வீட்டுக்குள் நுழைந்து வீட்டில் இருந்தவர்களை மிரட்டி அடித்து துன்புறுத்தி அவரிடம் இருந்து தங்க நகைகள் என்பவற்றை கொள்ளையிட்டு சென்றுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் குறித்த ஆசிரியரால் முறைப்பாடு செய்யப்பட்டிருந்ததன் அடிப்படையில் நேற்று இரவு குறித்த கிராமத்தில் உள்ள வீடொன்றில் திருட்டுக்கும்பல் நுழைந்ததும் விழிப்படைந்த அயலவர்கள்  தகவலை ஏனையவர்களுக்கும் பகிர்ந்து ஊர் இளைஞர்கள் மற்றும் பொதுமக்களை திரண்டு  குறித்த திருடர்களைமடக்கி பிடித்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் தப்பிச்செல்ல முற்பட்ட திருட்டு குழுவில் இருந்து மூவரே இவ்வாறு மடக்கி பிடிக்கப்பட்டனர்.

 இக்குழுவில் இருந்து மேலும் சிலர் தப்பியோடியதாகவும் தெரியவருகிறது. பிடிக்கப்பட்டவர்களை சம்பவ இடத்திற்கு வந்த கிளிநொச்சி பொலிஸார் கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

No comments