Header Ads

test

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தமிழ்ப் பிரிவான ஸ்ரீலங்கா சுதந்திர தமிழர் ஒன்றியத்துடன் ஈழத்தமிழர் சுயாட்சிக் கழகமும் இணைந்து செயற்படும் எனக் கழகத்தின் பொதுச் செயலாளரான திருமதி அனந்தி சசிதரன் அறிவித்துள்ளார்.!!!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தமிழ்ப் பிரிவான ஸ்ரீலங்கா சுதந்திர தமிழர் ஒன்றியத்துடன் ஈழத்தமிழர் சுயாட்சிக் கழகமும் இணைந்து செயற்படும் எனக் கழகத்தின் பொதுச் செயலாளரான திருமதி அனந்தி சசிதரன் அறிவித்துள்ளார்.!!!



ஸ்ரீலங்கா சுதந்திர தமிழர் ஒன்றியத்துடன் இணைந்து பயணிக்கும் மலையக மக்கள் முன்னேற்றக் கழகத்தினருக்கும் ஈழத்தமிழர் சுயாட்சிக் கழகத்தினருக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று யாழ். நகர விடுதியில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்றது.

இந்தச் சந்திப்பை தொடர்ந்து ஊடகவியலாளர்களை அவர்கள் கூட்டாக சந்தித்தனர்.


“வடக்கு – கிழக்கு மற்றும் மலையக மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் தேவைகள் தொடர்பில் சந்தித்து ஆராய்ந்தோம். அதற்கான தீர்வை பெறுவதற்கு முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் கலந்துரையாடினோம். எனவே நாம் தொடர்ந்தும் இணைந்து செயற்படத் தீர்மானித்துள்ளோம்” என்று அவர்கள் தெரிவித்தனர்.

மலையக மக்களின் பிரச்சினைகளை ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கு கொண்டு செல்வதாக மலையகப் பிரதிநிதிகளுக்கு அனந்தி வாக்குறுதி வழங்கினாராம் என்றும் இதன்போது தெரிவிக்கப்பட்டது.

இதன்போது கருத்து வெளியிட்ட அனந்தி சசிதரன், “ஸ்ரீலங்கா சுதந்திர தமிழர் ஒன்றியம் மற்றும் மலையக மக்கள் முன்னேற்றக் கழகம் ஆகியவற்றுடன் கொள்கையளவில் இணைந்து செயற்படவுள்ளோம்”- என்றார்.

அதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திர தமிழர் ஒன்றியத்தில் தலைவராக அங்கஜன் இராமநாதன் செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments