Header Ads

test

கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் அவர்களின் முயற்சியால் யாழ்ப்பாணம் செம்மணி வீதியில், நல்லூர் வரவேற்கின்றது என்ற வளைவு அமைக்கப்படவுள்ளது.!!!

கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் அவர்களின் முயற்சியால் யாழ்ப்பாணம் செம்மணி வீதியில், நல்லூர் வரவேற்கின்றது என்ற வளைவு அமைக்கப்படவுள்ளது.!!!



கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் அவர்களின் முயற்சியினால் யாழ்ப்பாணம் செம்மணி வீதியில், நல்லூர் வரவேற்கின்றது என்ற வளைவு அமைக்கப்படவுள்ளது.

யாழ்ப்பாணம் செம்மணி வீதியில், நல்லூர் வரவேற்கின்றது என்ற வளைவு அமைப்பது தொடர்பில், இன்று ஆராயப்பட்டுள்ளது.

கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மாகாண பணிப்பாளர் மற்றும் வீதி அதிகார சபை பொறியியலாளர்கள்,  நல்லூர் பிரதேச செயலர் மற்றும் பிரதேச சபை தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள்  கலந்துகொண்டனர்.

மத்திய அரசாங்கத்தின் நிதியீட்டத்தின் கீழ், 6 மில்லியன் ரூபா செலவில், நல்லூர் வரவேற்கின்றது வளைவு அமைக்கப்படவுள்ள நிலையில், இன்றையதினம் ஆரம்ப கட்ட கலந்துரையாடல் இடம்பெற்றது.

அதன் பிரகாரம், செம்மணி வீதியில், வளைவு அமைக்கப்படவுள்ள இடத்தை பார்வையிட்ட இராஜாங்க அமைச்சர் கௌரவ விஜயகலா மகேஸ்வரன் தலைமையிலான குழுவினர், விடயம் தொடர்பில் ஆராய்ந்துள்ளனர்.

இந்த நிலையில், எதிர்வரும் வாரம் வளைவுக்கான அடிக்கல் நாட்டப்படவுள்ளதாக, ஏற்பாட்டாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.





No comments