Header Ads

test

உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களின் அதிர்ச்சி வாக்கு மூலங்கள்.!!!

உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களின் அதிர்ச்சி வாக்கு மூலங்கள்.!!!


உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதலுக்கு தலைமை தாங்கிய பயங்கரவாதி மொஹமட் சஹ்ரானிடம் பயிற்சி பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 18 பேர் தொடர்பில் நடத்தப்பட்ட விசாரனைகளில் அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த நபர்கள் குழுவாக இணைந்து இலங்கையில் இரண்டாவது பாரிய தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாகவும்  என விசாரணைகளில் மூலம் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

தேசிய தவ்ஹித் ஜமாத் மற்றும் ஜமாத் மில்லதே இப்ராஹிம் ஆகிய தடை செயயப்பட்ட அமைப்புக்களில் செயற்பட்ட இவ் நபர்கள் ‘அபு’ என்ற கௌரவ பெயரில் சஹ்ரானினால் அழைக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.

இந்த பயங்கரவாத வலையமைப்பினை மொஹமட் சஹ்ரான் ‘அபு உபய்தா’ என்ற புனை பெயரில் அழைக்கப்பட்டதாகவும்  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முன்பதாக சஹ்ரான் உட்பட குழுவினர் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டதை  போல  இப்  18 நபர்களும் நுவரெலியா முகாமில் தற்கொலை தாக்குதல் நடத்த சத்தியப் பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.

நாட்டின் பிரதான மத நிகழ்வுகளின் போது ஒரே நாளில் ஒரே நேரத்தில் 9 மாகாணங்களிலும்  தாக்குதல் நடத்த இவர்கள்   திட்டமிட்டிருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளன.

அம்பாறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட  18 நபர்களும்  நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை முகாம்களில் வெடி பொருட்கள் மற்றும் ஆயுதங்கள் தொடர்பில் இரண்டு வாரங்கள் பயிற்சி பெற்றுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் யாவரும் 20 – 27 வயதுடையவர்கள் என அறிய முடிகிறது.

No comments