Header Ads

test

அரசியல் பலத்தை நீங்கள் எமக்கு தரும் பட்சத்தில் உங்கள் எதிர்பார்ப்புக்கள் நனவாகும் - டக்ளஸ் தேவானந்தா நம்பிக்கை.!!!

அரசியல் பலத்தை நீங்கள் எமக்கு தரும் பட்சத்தில் உங்கள் எதிர்பார்ப்புக்கள் நனவாகும் - டக்ளஸ்  தேவானந்தா  நம்பிக்கை.!!!


தமிழ் மக்களின் அரசியல் தெளிவே எதிர்காலத்தை நிர்ணயிக்கும். தமிழ் மக்கள் அரசியலில் தெளிவான நிலையை அடைவதனூடாகவே, எதிர்காலத்தில் அவர்கள் தமக்கான நிலையான அரசியல் தீர்வுகளையும் அபிவிருத்திகளையும் எட்ட முடியும். அந்த வகையில் சரியான அரசியல் தலைமையை உருவாக்க வேண்டியது தமிழ் மக்களின் இன்றைய தேவையாகும்.

மக்களின் பல்வேறுப்பட்ட தேவைப்பாடுகள், குறிப்பாக வாழ்வாதாரம், வீட்டுத்திட்டம், வீதி புனரமைப்பு உள்ளடங்களான தேவைப்பாடுகள் இதுவரை பூர்த்தி செய்யப்படாத நிலையிலேயே வாழ்ந்து வருவதை அவதானிக்க முடிகிறது.

அதுமட்டுமல்லாது பல இளைஞர் யுவதிகள் வேலைவாய்ப்பு இன்றியும் காணப்படுகின்றனர். இவ்வாறான தேவைப்பாடுகள் தீர்க்கப்படாது தொடர்வதற்கு காரணம் தமிழ் மக்கள் தேர்வு செய்து வந்த அரசியல் தலைமையே ஆகும்.

நாம் சுயநலன்களுக்காக மக்களது வாழ்வியலை பயன்படுத்துவது கிடையாது. அவர்களது வாழ்வாதாரம் மற்றும் அரசியல் உரிமைகள் நிலையானதாக பெறப்பட்டு உறுதிசெய்யப்பட வேண்டும் என்பதற்காகவே அயாராது உழைத்து வருகின்றோம்.

அந்த வகையில் இனிவரும் காலங்களில் மக்கள் தெளிவான அரசியல் தலைமையை தெரிவு செய்வதனூடாக தமது எதிர்காலத்தை வெற்றி கொள்ள முடியும் என்பது மட்டுமல்லாது சிறந்த வாழ்வியலை உருவாக்கி கொள்ள முடியும்.

அந்த வழிமுறையை உருவாக்கி தருவதற்கு நாம் என்றும் தயாராகவே இருக்கின்றோம். அதற்கான அரசியல் பலத்தை நீங்கள் எமக்கு தரும் பட்சத்தில் உங்கள் கனவு நனவாகும் என தெரிவித்துள்ளார்.


No comments