Header Ads

test

எமது மக்களின் அரசியல் அபிவிருத்தி உள்ளிட்ட அபிலாஷைகளை பெற்றுக்கொடுக்க ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் - டக்ளஸ் தேவானந்தா.!!!

எமது மக்களின் அரசியல் அபிவிருத்தி உள்ளிட்ட அபிலாஷைகளை பெற்றுக்கொடுக்க ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் - டக்ளஸ்  தேவானந்தா.!!!


நாம் வர்த்தக நோக்குடனோ அன்றி சுயநல தேவைகளுக்காகவோ அரசியல் செய்வது கிடையாது. எமது மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றிக் கொடுக்கவேண்டும் என்ற குறிக்கோளுடனேயே எமது அரசியல் செயற்பாடுகளை நாம் முன்னெடுத்து வருகின்றோம்.

அழிவு யுத்தத்தில் சிக்கிய எமது மக்களை மீட்டெடுத்து அவர்களுக்கு அரசியல் உரிமையுடன் கூடிய ஒரு சிறந்த நிரந்தரமான வாழ்வியலை உருவாக்க வேண்டும் என்றே நாம் செயலாற்றி வருகின்றோம்.

ஆனாலும் எமது மக்கள் இன்றுவரை உண்மையான மக்களை நேசிக்கின்ற அரசியல் தலைமையை தேர்வு செய்யும் சந்தர்ப்பத்தை உருவாக்கிக்கொள்ள தவறிவருகின்றார்கள்.

இதனாலேயே இன்றுவரை அவர்களது துன்ப துயரங்கள் தீர்வுகாணப்படாது தொடரக் காரணமாக இருக்கின்றது.

அடக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட எமது மக்கள் இன்று தலைநிமிர்ந்து வாழ்வதற்கான ஒரு சூழலை உருவாக்கி கொடுத்து அவர்களை பொருளாதார ரீதியில் முன்னேற்றம் காணச் செய்தவர்கள் நாம்தான்.

எமது மக்களின் வாக்குகளை வேறு சுயநலக் கதைகளை கூறி போலித் தேசியம் பேசி தேர்தல் காலங்களில் உதவிகளையும் பணத்தையும்  கொடுத்து  உங்களது வாக்குகளை வாங்கும் தரப்பினரால் எப்படி மக்களது நலன்களை முன்னிறுத்தி பணியாற்ற முடியும் என்று சிந்திக்க வேண்டும்.

அந்தவகையில் நாம் அனைவரும் ஒன்றுபட்டு எமது மக்களின் அரசியல் அபிவிருத்தி உள்ளிட்ட அபிலாஷைகளை பெற்றுக்கொடுக்க ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். 

அவ்வாறான முன்னெடுப்புக்களுக்கு நாம் என்றும் ஆதரவுப்பலம் கொடுக்க தயாராகவே இருக்கின்றோம் என பா.உ டக்ளஸ் தேவானந்தா கருத்து வெளியிட்டுள்ளார்.


No comments