Header Ads

test

திருகோணமலையில் ஆயுதங்கள் சில மீட்க்கப்பட்டுள்ளன.!!!

திருகோணமலையில்  ஆயுதங்கள் சில மீட்க்கப்பட்டுள்ளன.!!!



தோப்பூர் சின்னக் கலுவான் பாலத்தின் கீழிருந்து  வெடிபொருள்கள்  சில மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

திருகோணமலை மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோப்பூர் சின்னக் கலுவான் பாலத்தின் கீழிருந்து இன்று (27) பிற்பகல் 1.30 மணியளவில் வெடிபொருள்கள் சில   மீட்கப்பட்டுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பாலத்தின் கீழ் மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர் ஒருவர் குறித்த வெடிபொருள்களை பார்வையிட்டதன் அடிப்படையில்  அரச புலனாய்வுப் பிரிவினருக்கு வழங்கிய இரகசியத் தகவலின் காரணமாக மூதூர் பொலிஸாரால் இவ் வெடி பொருள்கள் மீட்கப்பட்டுள்ளன.

இவ் விடயம் தொடர்பில் பொலிஸார் மற்றும் அரச புலனாய்வு பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


No comments