Header Ads

test

கௌரவ அங்கஜன் இராமநாதனின் “நாட்டிற்காக ஒன்றிணைவோம்” தேசிய செயற்திட்டத்திற்கான விசேட செய்தி.!!!

கௌரவ அங்கஜன் இராமநாதனின் “நாட்டிற்காக ஒன்றிணைவோம்” தேசிய செயற்திட்டத்திற்கான விசேட செய்தி.!!!


நாட்டிற்காக ஒன்றிணைவோம் எனும் தேசிய செயற்திட்டத்தினூடாக எமது  யாழ் மாவட்டத்தில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட கிராமங்களில் வசிக்கும் மக்களை ஒன்றிணைத்து அவர்களது அனைத்து வகையான தேவைகளையும் நிறைவேற்ற நாம் நடவடிக்கையெடுக்கவுள்ளோம்

ஒவ்வொரு  துறை சார்ந்த உத்தியோகத்தர்கள் மூலம் மக்களின் தேவைகள் அடையாளங்காணப்பட்டு அவற்றை பூர்த்தி செய்யக் கூடிய வழிவகைகள்  இந்த திட்டத்தின் ஊடாக மேற்கொள்ளப்படுகின்றது.

உங்களின் தேவைகளை உங்கள் காலடிக்கே வந்து தீர்த்து வைக்கும் இந்த மகோன்னதமான தேசிய திட்டத்திற்கு உங்கள் அனைவரையும் வரவேற்கின்றேன்.

அதிகாரிகள் வேறு மக்கள் வேறு அல்ல மக்களுக்காகவே அதிகாரிகள் என்பதை உணர்த்தும் இந்த உன்னத திட்டத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உங்கள் நலன்களை கருத்திற் கொண்டே உருவாக்கியுள்ளார் என்பதை இந்த இடத்தில் பெருமிதத்துடன் நினைவு படுத்திக் கொள்கின்றேன்.

உங்களுக்கு நேரடியாக பயன் தரும் பல  விடயங்கள் இந்த தேசிய வேலைத்திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளன

இதன் மூலம் எமது கிராம மக்களினது வாழ்வு உரிமையை சக்திமிக்கதாக வலுவாக்கவும், நம் தேசத்தில் அவர்கள் உறுதிமிக்கவர்களாக பரிணமிக்கவும்  நாடளாவிய ரீதியில் ஒன்றிணைந்த வலுவான மக்கள் சக்தியை கட்டி எழுப்ப இந்த திட்டம் ஜனாதிபதி செயலகத்தினால் நடைமுறைப்படுத்தப்படுகின்றது

இதில் கிராமசக்தி மக்கள் இயக்கம், தேசிய உணவு உற்பத்தித் திட்டம், சிறுவர்களைப் பாதுகாக்கும் செயற்திட்டம், சிறுநீரக நோய் நிவாரண ஜனாதிபதி செயலணி, போஷாக்கு செயற்திட்டம், வனங்களை பாதுகாக்கும் திட்டம், தேசிய சுற்றாடல் பாதுகாப்பு செயற்திட்டம், தேசிய போதை ஒழிப்புத் திட்டம், ஸ்மார்ட் ஶ்ரீ லங்கா திட்டம், வயோதிபர்களையும் அங்கவீனர்களைப் பாதுகாக்கும் செயற்திட்டம் மற்றும் சிறியளவிலான விவசாய உற்பத்தி பங்குடைமை செயற் திட்டம் (SAPP) ஆகிய மக்கள் நலன் சார் திட்டங்கள் இந்த வாரம் முழுவதும் இந்த மண்ணில் முன்னெடுக்கப்படவுள்ளது.

இதனூடாக யாழிற்கும், தீவகத்திற்கும் குடிநீர் பிரச்சினை மற்றும் எமது மண்ணின் சமூக பொருளாதார மற்றும் சுகாதார பிரச்சினைகளுக்கான தீர்வுகளை ஒரே வாரத்தில் பெற்றுக் கொடுக்க நடவடிக்கையெடுத்துள்ளோம்.

நீண்டகால மற்றும் குறுங்கால நடைமுறை செயற்பாடுகள் ஊடாக நமது வளங்களை நாமே பிரயோகம் செய்வதன் மூலமும் எமது பல்வேறு துறை சார்ந்த கட்டமைப்புக்களையும் நேர்த்தியாக்கலாம் என்பதும் எனது நம்பிக்கையாகும்.

எனவே திட்டங்களில் கலந்து கொண்டு உங்களின் நலனை மேம்படுத்திக் கொள்வதுடன் உங்கள் பிரதேங்களின் வளர்ச்சி மற்றும் குறைபாடுகளை நீக்கவும் முன்வர வேண்டும் என்பதுடன் அதற்காய் எம்முடன் கைகோர்த்து நம் யாழ் மண்ணை சகல தேவைகளும் பூர்த்தி பெற்ற பிரதேசமாய் மாற்ற எங்களுடன் ஒன்றாய் பயணிக்க அன்புட அழைக்கின்றேன்.
வாருங்கள் நமது நாட்டுக்காக இன்றே நாம் தொடங்கி வைப்போம்.  ஒன்றாகஇருங்கள்
என குறிப்பிட்டுள்ளார்.



No comments