Header Ads

test

வவுனியா புதுக்குளம் சித்திவிநாயகர் தேவஸ்தான வருடாந்த மகோற்சவ திருவிழா இன்றைய தினம் ஆரம்பமாகியுள்ளன.!!!

வவுனியா புதுக்குளம் சித்திவிநாயகர் தேவஸ்தான வருடாந்த மகோற்சவ திருவிழா இன்றைய தினம் ஆரம்பமாகியுள்ளன.!!!



21.8.2019 இன்றைய தினம் புதன்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமான 12 நாட்களைக் கொண்ட இத் திருவிழா 19. 2019 ஞாயிற்றுக்கிழமை வைரவர் சாந்தியுடன் நிறைவுபெறும்.

28.8.2019 புதன் கிழமை அன்று ஆலயத்தின் புது வரவான சித்திரத்தேர் வெள்ளோட்ட விழா பிற்பகல் 1.30 மணிக்கு நடைபெறுவதுடன் தேர் திருவிழா 29.09.2019 வியாழக்கிழமை காலை 10.45 மணிக்கு நடைபெறும்

தேர் திருவிழா தினத்தன்று அடியார்கள் நேத்திக்கடன்களை செய்வதுடன் பத்து தினங்களும் மகேஸ்வர பூசையும் தாக சாந்தியும் வழங்கப்படும்.

தினமும் காலை ஏழு முப்பது மணிக்கு உதய பூசையுடன் ஆரம்பமான திருவிழா  மாலை எட்டு முப்பது மணிக்கு வசந்த மண்டப பூசை இடம்பெற்று விநாயகப் பெருமானின் உள்வீதி வெளிவீதி உலா வருதல் உடன் நிறைவுறும்.

திருவிழா பத்து தினங்களும் விசேட இசை நிகழ்வு இடம்பெறும் என ஆலய நிர்வாகம் அடியார்களுக்கு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments