நல்லூர் கந்தசுவாமி ஆலய நேர்த்திக் கடன் தொடர்பில் பா.உ டக்ளஸ் தேவானந்தா கடும் கண்டனம்.!!!

இந்த வருடம் நல்லூர்க் கந்தசுவாமி ஆலயப் பெருந்திருவிழாவின் தேர், தீர்த்த உற்சவ நாட்களில் பறவைக் காவடிகள், தூக்கு காவடிகள் எடுப்பதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், ஈழமக்கள் ஜனநாயக கட்சியின்(ஈ.பி.டி.பி) செயலாளர் டக்ளஸ் தேவானந்தா கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார்.
யாழ். நகரிலுள்ள ஈபிடிபியின் கட்சித் தலைமைக் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
குறிப்பாக வீதித் தடைக்கு அப்பால் அவர்கள் தமது நேர்த்திக் கடன்களை நிறைவேற்ற வேண்டிய சூழலுக்கு நேர்த்திக் கடன் நிறைவேற்றும் அடியவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். இந்த விடயம் மிகவும் மனவருத்தத்துக்குரிய விடயம்.
கடந்த காலங்களில் நெருக்கடியான காலகட்டங்களில் கூட இவ்வாறான காவடிகள் எடுக்கும் போது கோயில் வாசலில் கொண்டு வந்து முடிப்பது தான் வழமையாக இருந்துவந்துள்ளது.
ஆனால், இந்த முறை காவடியெடுக்கும் அடியவர்கள் தமது நேர்த்திக் கடன்களை நிறைவு செய்யும் போது முருகனைத் தரிசிக்க முடியாதவாறான நிலையேற்பட்டுள்ளது.
நாங்கள் யாழ். மாநகரசபையை நிர்வாகம் செய்திருந்தால் நிச்சயமாக இவ்வாறான செயற்பாட்டிற்கு இடம் கொடுத்திருக்க மாட்டோம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment