Header Ads

test

கம்பரெலிய திட்டத்தின் கீழ் 122 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்ட திட்டங்கள் பொது மக்களிடம் கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் அவர்களால் கையளிக்கப்பட்டன.!!!

கம்பரெலிய திட்டத்தின் கீழ் 122 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்ட திட்டங்கள்  பொது மக்களிடம் கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் அவர்களால் கையளிக்கப்பட்டன.!!!


கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் அவர்களின் துரித  முயற்சியின் பயனாக இன்று (27) காரைநகர் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பகுதியில் 
கம்பரெலிய திட்டத்தின் கீழ் 122 மில்லியன் ரூபா ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்ட திட்டங்கள்  பொது மக்களிடம் கையளிக்கப்பட்டன.

குறித்த நிகழ்வானது  இன்றைய தினம் காரைநகர் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றன.

காரைநகர் பிரதேச செயலாளர்  தலைமையில் நடைபெற்ற குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கலந்து சிறப்பித்ததோடு  கம்பரெலிய திட்டத்தின்கீழ் நடைமுறைப்படுத்தப்பட்ட   திட்டங்களையும் பயனாளிகளிடம் கையளித்தார்.

இந்நிகழ்வு தொடர்பில் மேலும் தெரியவருவதாவது  -

இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் காரைநகர்  பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் காணப்பட்ட குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் முகமாக   பாடசாலைகள், சேதமடைந்த வீதிகள் புனரமைப்பு மற்றும் தேவாலயங்கள், ஆலயங்கள் என்பனவும்  புனரமைக்கப்பட்டு மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.













No comments