Header Ads

test

இன்றைய நாள் எப்படி.!!! 06.08.2019

இன்றைய நாள் எப்படி.!!!   06.08.2019




மேஷம் குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். புதிய முயற்சிகள் வெற்றியடையும். கணவன் மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். வீடு வாங்குவது, கட்டுவது சாதகமாக அமையும். வங்கிக்கடன் கிடைக்கும். பழுதான வாகனத்தை மாற்றி புது வாகனம் வாங்குவீர்கள். பிள்ளைகளைக் கனிவுடன் நடத்துங்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வீட்டை விரிவுபடுத்திக் கட்ட முடிவெடுப்பீர்கள். நட்புவட்டம் விரியும். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரி உங்களை நம்பி சில முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார். விடாமுயற்சியால் வெற்றிபெறும் நேரமிது.



ரிஷபம்
 திட்டமிட்ட காரியங்கள் தடையின்றி முடியும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். திடீர் பணவரவு, செல்வாக்கு அதிகரிக்கும். எதிர்மறை எண்ணங்கள், தாழ்வு மனப்பான்மை நீங்கும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். பழைய நண்பர்களைச் சந்திப்பீர்கள். உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். பிள்ளைகளிடமிருந்த பிடிவாத குணம் விலகும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். வியாபாரத்தில் தேங்கியிருந்த சரக்குகள் விற்றுத் தீரும். உத்தியோகத்தில் நிலவிய மறைமுக அவமானங்கள் நீங்கும். உழைப்பால் உயரும் நேரமிது.



மிதுனம் அழகும் இளமையும் கூடும். வாகனப்பழுது நீங்கும். விலையுயர்ந்த ஆடைகள் வாங்குவீர்கள். உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தங்கும். வீடு, மனை வாங்க கடனுதவி கிடைக்கும். உறவினர்களால் ஆதாயம் உண்டு. நவீன சாதனங்கள் வாங்குவீர்கள். சகோதரர்களுடன் இருந்த மனவருத்தம் நீங்கும். அதேவேளையில் மாமனார், மாமியாரை அனுசரித்துப்போவது நல்லது. வியாபாரத்தில் பாக்கிகளைப் போராடி வசூலிப்பீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் இருந்த மோதல் நீங்கும். தொலைநோக்குச் சிந்தனையுடன் செயல்படவேண்டிய நேரமிது.



கடகம் சோர்வு நீங்கி, துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். அரைகுறையாக நின்ற வேலைகள் உடனே முடியும். எதிர்ப்புகள் குறையும். குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பிள்ளைகளைப் புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். ஆடை, ஆபரணம் சேரும். கல்யாணப் பேச்சுவார்த்தை சுமுகமாக முடியும். வாகனத்தைச் சீர்செய்வீர்கள். பழைய உறவினர்கள் தேடி வந்து பேசுவார்கள். புதியவர்கள் நண்பர்களாவார்கள். முன்கோபத்தைத் தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் சில நுணுக்கங்களைக் கற்றுக்கொள்வீர்கள்.உத்தியோகத்தில் மேலதிகாரி உங்களின் கோரிக்கையை ஏற்பார். பொறுப்புகள் அதிகரிக்கும் நேரமிது.


சிம்மம் சவால்களில் வெற்றிபெறுவீர்கள். திடீர் யோகம் உண்டாகும். ஓரளவு பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் உங்களின் கை ஓங்கும். பிள்ளைகள், உங்கள் மனம்கோணாமல் நடந்துகொள்வார்கள். கணவர் உங்களின் எண்ணங்கள் செயல்வடிவம் பெற உதவிடுவார். வீடு கட்ட வங்கிக்கடன் கிடைக்கும். மனைவிவழி உறவினர்கள் மதிப்பார்கள். புது டிசைனில் நகை வாங்குவீர்கள். திருவிழாக்களை முன்னின்று நடத்துவீர்கள். இயக்கம், சங்கம் போன்றவற்றில் கௌரவப் பதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். உத்தியோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடிவரும். திட்டமிடுதல் மூலம் சாதிக்கும் நேரமிது.



கன்னி செல்வம், செல்வாக்கு கூடும். கல்யாணப் பேச்சுவார்த்தை வெற்றியடையும். நவீன ரக வாகனம் வாங்குவீர்கள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். புதிய பதவிகள் தேடிவரும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலைக்குத் தகுந்தாற்போல் பொறுப்பாக நடந்துகொள்வார்கள். புனிதப் பயணங்கள் சென்றுவருவீர்கள். உங்கள் ரசனைப்படி வீடு, மனை அமையும். சொந்தங்கள் வலிய வந்து பேசுவார்கள். மாமனார், மாமியார் உங்களின் செயல்களைப் பாராட்டுவர். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் மேலதிகாரி உங்களின் ஆலோசனையைக் கேட்பார். விட்டுக் கொடுப்பதால் வெற்றிபெறும் நேரமிது.



துலாம் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். எதிர்ப்புகள் அடங்கும். பணவரவு உண்டு. சமூகத்தில் உயர் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். கௌரவப் பதவிகள் தேடிவரும். விலகிச்சென்ற உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள். சுப காரியங்கள் பலவற்றுக்குத் தலைமைதாங்கி நடத்துவீர்கள். பொறுப்புகள் அதிகரிக்கும். சகோதரர்கள் ஆதரவாக இருப்பார்கள். புது டிசைனில் நகை வாங்குவீர்கள். மகளுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். நாத்தனார் உங்களை மதிப்பார். வியாபாரத்தில் புதிய பொருள் ஒன்றுக்கு ஏஜென்சி எடுத்து நடத்துவீர்கள். உத்தியோகத்தில் இருந்த தொல்லைகள் நீங்கும். பிறரால் ஆதாயமடையும் நேரமிது.



விருச்சிகம் புதிய முயற்சிகள் பலிதமாகும். போட்டிகளில் வெற்றிபெறுவீர்கள். தடைப்பட்ட சில காரியங்களை விரைந்து முடிப்பீர்கள். பிள்ளைகளால் ஆறுதல் அடைவீர்கள். வீண்செலவு, டென்ஷன் குறையும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். இருந்தபோதிலும், பணப்பற்றாக்குறை நீடிக்கும். வெளியூர்ப் பயணங்களால் பலனடைவீர்கள். பழைய சொந்தபந்தங்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். குலதெய்வ நேர்த்திக் கடனை முடிப்பீர்கள். கணவர் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார். நாத்தனார், மாமியார் மதிப்பார்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களைக் கற்றுக்கொள்வீர்கள். உத்தியோகத்தில் இழந்த சலுகைகளை மீண்டும் பெறுவீர்கள். நினைத்தது நிறைவேறும் நேரமிது.



தனுசு எதிர்பாராத பணவரவு, யோகம் உண்டு. வாகன வசதி பெருகும். கணவன் மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். குழந்தைபாக்கியம் சிலருக்குக் கிடைக்கும். வீடு கட்ட வங்கிக்கடன் கிடைக்கும். தடைப்பட்ட வேலைகள் முடியும். சகோதரிக்குத் திருமணம் கூடிவரும். உறவினர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். பால்ய நண்பர்கள் தேடிவருவார்கள். வெளிவட்டாரத்தில் யாரையும் விமர்சித்துப் பேச வேண்டாம். நாத்தனார், உடன்பிறந்தவர்களுடன் வீண் வாக்குவாதங்கள் செய்யாமலிருப்பது நல்லது. வியாபாரத்தில் போட்டிகள் குறையும். புதிய வாடிக்கையாளர்கள் அதிகரிப்பார்கள். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளைத் தாண்டி வெற்றிபெறுவீர்கள். திட நம்பிக்கையால் வெல்லும் நேரமிது.



மகரம் மனத்தில் புதிய தெம்பு பிறக்கும். முகப்பொலிவு கூடும். வாகனப் பழுது நீங்கும். கணவன் மனைவி உறவு பலப்படும். பிள்ளைகளின் பிடிவாதம் குறையும். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் இருந்த அதிருப்தி, மன வருத்தம் நீங்கும். சொத்துப் பிரச்னைகள் சுமுகமாகும். பழுதான பொருள்களை மாற்றுவீர்கள். கல்யாணப் பேச்சுவார்த்தை கூடிவரும். தாய்வழியில் மதிப்பு அதிகரிக்கும். ஆனால் நாத்தனார், கொழுந்தனார் வகையில் ஈடுபடும் வேலைகள் சிலவற்றில் அலைச்சல் இருக்கும். வியாபாரத்தில் இருந்து வந்த தேக்கநிலை நீங்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிடைக்கும். சகிப்புத்தன்மையால் நிம்மதி பெறும் நேரமிது.




கும்பம் இடர்பாடுகள், சிக்கல்களைச் சமாளிக்கும் சக்தி உண்டாகும். அரசு வகையில் ஆதாயம் கிடைக்கும். அயல்நாட்டிலிருப்பவர்களால் உதவிகள் கிடைக்கும். சொத்துப் பிரச்னைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். கணவர் உங்களின் தியாக மனத்தைப் புரிந்துகொள்வார். பிள்ளைகளை விட்டுப்பிடித்து உங்களின் வழிக்குக் கொண்டு வருவது நல்லது. உறவினர்களுடன் வீண்வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். கர்ப்பிணிப் பெண்கள் கவனமாக இருக்கப் பாருங்கள். வியாபாரத்தில் ரகசியங்கள் யார் மூலம் கசிகிறது என்பதை அறிந்து புதிய முடிவு எடுப்பீர்கள். உத்தியோகத்தில் எல்லோரும் மதிப்பார்கள். நினைத்ததை முடிக்கும் நேரமிது.



மீனம் பெரிய திட்டங்கள் தீட்டுவீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். பழைய சிக்கல்கள் தீரும். குடும்பத்தில் உங்களின் வார்த்தைக்கு மதிப்பு கூடும். பிள்ளைகளின் வருங்காலம் குறித்து யோசிப்பீர்கள். குழந்தை பாக்கியம் சிலருக்குக் கிடைக்கும். நவீன ரக ஆடியோ, வீடியோ சாதனங்கள் வாங்குவீர்கள். குலதெய்வ பிரார்த்தனைகள் நிறைவேறும். நண்பர்கள், உறவினர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். விருந்தினர் வருகை அதிகரிக்கும். வீடு கட்ட கடன் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியடையும். உத்தியோகத்தில் தலைமையின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். திடீர் நன்மைகள் சூழும் நேரமிது.


No comments