வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களின் அதிரடி அறிவிப்பு.!!!
வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களின் அதிரடி அறிவிப்பு.!!!
அரச பதவிகளுக்கு விண்ணப்பித்து அதற்கான நியமனங்கள் வழங்கப்படுகின்றபோது தாங்கள் விரும்பிய இடத்துக்கு நியமனம் கிடைக்கவில்லையென வழங்கப்பட்ட இடத்துக்கு செல்லாது இருப்போருக்கு ஏழு வருடங்களுக்கு எந்தவித அரச உத்தியோகமும் வழங்கப்படமாட்டாதென வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் நேற்றுத் தெரிவித்தார்.
இவ்வாறானதொரு தீர்மானம் வட மாகாணத்தில் எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்தார். மன்னார் மாவட்ட செயலகத்தில் நேற்று (17) நடைபெற்ற நிகழ்வில் 77 பேருக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனங்களும், 3 பேருக்கு கலாசார
அபிவிருத்தி உத்தியோகத்தர் பதவிகளும், 9 நபர்களுக்கு தகவல் தொழில் நுட்ப ஆசிரியர் பதவிகளுக்குமான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வுகளும் நடைபெற்றன.
இந் நிகழ்வில் வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் மற்றும் மன்னார் மாவட்ட செயலளார்சீ.ஏ.மோகன்ராஸ், வட மாகாண அமைச்சுக்களின் மகளிர் விவகார அமைச்சின் செயலாளர், உள்ளூராட்சி திணைக்கள ஆணையாளர், சுகாதார துறை அமைச்சின் செயலாளர், விவசாய அமைச்சின் செயலாளர், கல்வி அமைச்சின் செயலாளர், வடக்கு மாகாண ஆளுநரின் செயலக செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு நியமனக் கடிதங்களை வழங்கிய பின்னர் வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தொடர்ந்து உரையாற்றுகையில் அபிவிருத்தி உத்தியோகத்தர் என்ற பதவிகளுக்கான நியமனக் கடிதங்களை நீங்கள் பெறுகின்றீர்கள் இவ் நியமனத்தை பெறும் நீங்கள் உங்கள் கடமைகளை சிறப்பான முறையில் மேற்கொள்ள வேண்டும்.
இவ் பதவிகளுக்கான நியமனம் இது ஐந்தாவது தடவையாக வழங்கப்படுகின்றது. இவ் பதவிகளைப் பெறுவோர் ஒழுக்கத்துடன் தங்கள் கடமைகளை செய்ய வேண்டும். இந் நியமனத்தை பெற்றவுடன் அடுத்து நீங்கள் செய்வது என்னவெனில் உடன் இடமாற்றம் கோருவது. சிலர் நியமனத்தை பெற்று ஒரு மாத காலமாக நியமிக்கப்பட்ட இடங்களுக்கு செல்லாது இருப்பது. குறிப்பிட்ட இடங்களுக்கு போகாமல் இருப்பதை அறிந்து ஒன்றரை மாதத்துக்குப் பின்தான் எமக்கு தெரியவரும் இவர்கள் தங்கள் கடமைகளை பொறுப்பேற்கவில்லையென்று.
உங்களுக்கு பரீட்சை வைத்து பின் நேர்முகப் பரீட்சை வைத்து அதிகாரிகள் உங்களுக்காக தங்கள் நேரங்களை செலவழித்து இருந்தாலும் தங்கள் கடமைகளை பொறுப்பேற்கவில்லை என தெரிவிப்பதும் இல்லை என தெரிவித்துள்ளார்.
Post a Comment