வவுனியாவில் இன்று அதிகாலை புகையிரதம் மோதி நபர் ஒருவர் மரணம்.!!!
வவுனியாவில் இன்று அதிகாலை புகையிரதம் மோதி நபர் ஒருவர் மரணம்.!!!
வவுனியா மூன்றுமுறிப்பு எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு அன்மையிலுள்ள தனியார் பேருந்து தரிப்பிடத்தில் பேருந்துகளில் சுத்தம் செய்துவந்த மதுசான் திலிந்த ஜெயவீர என்ற 25 வயதுடைய கல்கமுவ பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞனே இதில் மரணமடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று அதிகாலை 3.30 மணியளவில் வவுனியாவிலிருந்து கொழும்புக்கு சென்ற புகையிரதம் மோதியே உயிரிழந்திருக்கலாம் அல்லது புகையிரத கடவையில் தூங்கியிருந்தபோது இவ் விபத்து நிகழ்ந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சடலம் புகையிரத கடவைக்கு அண்மையாக காணப்படுகிறது அத்துடன்
இதன் அருகே தீப்பெட்டி மற்றும் சில்லறை காசு என்பன கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment