கிளிநொச்சி விசுவமடு பகுதியில் மர்மகும்பல் ஒன்று வீட்டுக்குள் புகுந்து குழி ஒன்றை தோண்டியுள்ளனர்.!!!
கிளிநொச்சி விசுவமடு பகுதியில் மர்மகும்பல் ஒன்று வீட்டுக்குள் புகுந்து குழி ஒன்றை தோண்டியுள்ளனர்.!!!
கிளிநொச்சி விசுவமடு பகுதியில் மர்மகும்பல் ஒன்று வீட்டுக்குள் புகுந்து வீட்டில் வசித்துவந்த விசேட தேவைக்குட்பட்ட பெண் மற்றும் அவரின் சகோதரியின் மகன் ஆகியோருக்கு கை கால்கள் கட்டப்பட்டதோடு வாய்க்கு பிளாஸ்ரர் ஒட்டப்பட்டதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
மேலும் -
மேலும் -
சம்பவம் இடம்பெற்ற வீட்டுக்கு அருகில் குழி ஒன்றை வெட்டி பின்பு அங்கிருந்து தப்பித்துச் சென்றுள்ளனர். இச்சம்பவமானது அப்பகுதியை அச்சத்தில் உறையவைத்துள்ளது.
இச்சம்பவமானது கிளிநொச்சி விசுவமடு புன்னைநீராவி நாதன் குடியிருப்பு பகுதியில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக மேலும் தெரியவருவது -
நேற்றைய முன்தினம் 21.07.2019 இரவு 9 மணியளவில் சுமார் ஏழு பேர் கொண்ட மர்ம கும்பலொன்று இவ் வீட்டுக்குள் புகுந்துள்ளது. இதில் ஒரு பெண்ணொருவரும் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
வீட்டுக்குள் புகுந்து வீட்டில் வசித்துவந்த விசேட தேவைக்குட்பட்ட பெண் மற்றும் அவரின் சகோதரியின் மகன் ஆகியோருக்கு கை கால்கள் கட்டப்பட்டதோடு வாய்க்கு பிளாஸ்ரர் ஒட்டப்பட்டதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
தொடர்ந்து வீட்டிற்கு அருகில் பாரிய குழி ஒன்றை தோண்டிய பின்னர் அக் குழியை மீள மூடியதன் பின்பு அங்கிருந்து தப்பிச்செல்லும் போது சம்மந்தப்பட்டவர்களின் கட்டுக்களை இழக்கி சென்றுள்ளனர்.
மேலும் இச்சம்பவத்தின் முக்கிய குறிப்புக்கள்:
* குறித்த வீட்டில் சம்பவம் இடம்பெற்றபோது வீட்டிலிருந்த பெண்ணின் தந்தை (சிறுவனின் பேரன்) வெளியில் சென்றிருந்த சந்தர்ப்பத்தில் மறுநாள் காலை 22.07.2019 வீட்டுக்கு வந்த நிலையில் நடந்த சம்பவத்தை நேற்றையதினம் பொலிசாருக்கு தெரிவித்துள்ளார்.
* மேலும் சம்பவம் இடம்பெற்ற பகுதிக்கு சென்ற பொலிஸார் வீட்டு உரிமையாளரை அச்சுறுத்தும் பாணியில் நடந்துகொண்டதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
* இதேவேளை குறித்த வீட்டிற்கு ஊடகவியலாளர்கள் செல்வதற்கு முற்றாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
* குறித்த கொள்ளை கும்பலில் பெண் ஒருவரும் வந்துள்ளார்.
* சம்பவ இடத்தில் பொலிஸார் நடந்துகொண்ட விதத்தை கண்ணுற்று நோக்கும் போது பொலிஸாருக்கும் குறித்த மர்ம கும்பலுக்கும் தொடர்புள்ளதா என அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
* மேலும் முன்னர் இக் காணியை விற்பனை செய்த நபர் பொலிஸாருடன் நெருக்கமான உறவுகளை பேணி வந்தமையும் அறியமுடிகிறது.
* குறித்த காணியை விற்பனைசெய்த நபர் மீள காணியை அபகரிக்கும் நோக்கில் செயற்பட்டிருக்கலாம் என்றும் தெரியவருகிறது.
* இவ் மர்ம கும்பல் தோண்டிய குழிக்குள் அவர்களது காலணி ஒன்றும் காணப்பட்டுள்ளது.
* சம்பவம் இடம்பெற்ற வீட்டிலிருந்து ஐ- 6 வகை தொலைபேசி ஒன்றையும் களவாடிச்சென்றுள்ளனர்.
* இதுவரை பொலீஸார் எவ்வித தடய ஆய்வுகளும் மேற்கொள்ளவில்லை, மற்றும் குறித்த தொலைபேசியில் பாவனைக்குட்படுத்தப்பட்ட இலக்கத்தை பெற்றுக்கொள்ளவில்லையென்றும் கையடக்க தொலைபேசி மூலம் மர்ம கும்பலை கண்டுபிடிப்பதற்க்கான ஆரம்பகட்ட வேலைகள் எதையும் மேற்கொள்ளவில்லை என்றும் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
Post a Comment