வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள படையினரின் சோதனைச்சாவடியை உடனடியாக அகற்றுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் கோரிக்கை விடுத்துள்ளார்.!!!
வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள படையினரின் சோதனைச்சாவடியை உடனடியாக அகற்றுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் கோரிக்கை விடுத்துள்ளார்.!!!
நாட்டில் இடம்பெற்ற பல்வேறு குண்டு வெடிப்புச் சம்பவங்களை தொடர்ந்து வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் சோதனைச்சாவடி அமைக்கப்பட்டது.
தற்போது நாடு வழமைக்கு திரும்பியுள்ள நிலையில் இச் சோதனைச்சாவடி பேருந்து நிலையப்பகுதியில் தேவையற்றதாக காணப்படுகின்றது.
எனவே சோதனை சாவடியினை புதிய பேருந்து நிலையப்பகுதியிலிருந்து உடனடியாக அப்புறப்படுத்தி பொதுமக்கள் இடையூறுகள் இன்றி தமது பயணங்களை மேற்கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
Post a Comment