வடமாகாண சாரதி பயிற்சி பாடசாலைகளின் உரிமையாளர்களுக்கும் கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களுக்குமிடையிலான சந்திப்பு கடந்த 23ஆம் திகதி ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது.!!!

வடமாகாணத்தில் அதிகரித்துவரும் வீதி விபத்துக்கள் காரணமாக ஏற்படும் உயிரிழப்புக்கள் உடல் அவயவ இழப்புக்களை கட்டுப்படுத்துவதற்காக கௌரவ ஆளுநரினால் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளில் ஒரு அங்கமாகவே சாரதி பயிற்சி பாடசாலைகளின் உரிமையாளர்களுடனான இந்த சந்திப்பு இடம்பெற்றது.
சாரதி பயிற்சி பாடசாலைகள் அனுமதிப் பத்திரத்திற்கான பயிற்சிகளை வழங்கும் போது தரமானதும் முறையானதுமான பயிற்சிகளை வழங்கினால் இவ்வாறான வீதி விபத்துகளை குறைத்துக் கொள்ளலாம் எனவும் ஆளுநர் அவர்கள் இதன்போது தெரிவித்தார்.
அத்தோடு சாரதி அனுமதிப்பத்திரம் பெற வருபவருக்கு குறைந்தது 30 மணித்தியாலங்கள் செயன்முறைப் பயிற்சியும் 10 மணித்தியாலங்கள் அப்பியாசப் பயிற்சியையும், இந்த செயன்முறை பயிற்சியில் இரவில் வாகனம் ஓட்டுவதற்கான பயிற்சியும் வடமாகாணத்தின் சாரதி பயிற்சிப் பாடசாலைகள் அனைத்தும் கட்டாயமாக வழங்க வேண்டுமென்றும் கௌரவ ஆளுநர் அவர்கள் இதன்போது தெரிவித்தார்.
இதேவேளை வைத்திய கலாநிதி ரி.கோபிசங்கர் அவர்களின் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள ''வடமாகாண வீதி பாதுகாப்பு சபையின்" ஊடாக சாரதி பயிற்சி பாடசாலைகளானது பயிலுனர்களுக்கு இந்த பயிற்சிகளை சரியான முறையில் வழங்குகின்றனரா என்பதை கண்காணிப்பதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் குறிப்பிட்டார்.
இதேவேளை யாழில் சாரதிப் பயிற்சிகளை வழங்குவதற்கு பொருத்தமான இடமொன்று இல்லை என்பதை சுட்டிக்காட்டிய உரிமையாளர்கள் பொருத்தமான இடமொன்றை தமக்கு பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுத்தனர். இதன்போது கருத்து தெரிவித்த கௌரவ ஆளுநர் அவர்கள் பொருத்தமான இடமொன்றை அதிகாரிகளுடன் கலந்துரையாடி பெற்றுத் தருவதாக தெரிவித்தார்.

Post a Comment