Header Ads

test

18.07.2019 இன்றைய நாளுக்கான அனைத்து ராசிக்குமான பலன்கள்.!!!



18.07.2019 இன்றைய நாளுக்கான அனைத்து ராசிக்குமான பலன்கள்.!!!


மேஷம்:
எதையும் தைரியமாக எதிர்கொள்ளும் மேஷ ராசிக்காரர்களே.. ராசிக்கு மூன்றாம் வீட்டில் சூரியன், ராகு சுக்கிரன், நான்காம் வீட்டில் செவ்வாய், புதன், எட்டாம் வீட்டில் குரு, ஒன்பதாம் வீட்டில் சனி கேது என இந்த வாரம் கிரகங்களின் சஞ்சாரம் அமைந்துள்ளது. வார முற்பகுதியில் மூன்றாம் வீட்டில் சுக்கிரன் சூரியன் ராகு ஒரே வீட்டில் சஞ்சரிப்பதால் பூமி, செங்கல் கட்டிடத்தொழில் மருந்து ரத்தம் தொடர்பான தொழில், நெருப்பு தொடர்பான தொழில்கள் நல்ல லாபத்தை தரும். பெண் மாப்பிள்ளைக்கு திருமண பொருத்தம் பார்க்கலாம் அற்புதமாக பொருந்தி வரும். காதல் விசயங்களில் கவனம். வார இறுதியில் சூரியன் நான்காமிடத்தில் உள்ள செவ்வாய் புதனுடன் இணையும் காலத்தில் நன்மைகள் நடைபெறும். கல்வியில் மேன்மை நிலை உண்டாகும் சனியால் யோகம் அதிகரிப்பதால் புதிய வேலைக்கு முயற்சி செய்யலாம். புதிய வீடு வாங்குவீர்கள். வங்கி கடன் மூலம் நன்மைகள் நடைபெறும். அரசாங்க பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளம் அதிகரிக்கும், அரசு ஒதுக்கீட்டில் வீடு கிடைக்கும். ராசி அதிபதி நீசமாக இருந்தாலும் குரு பார்வை இருப்பதால் தன வரவு அதிகரிக்கும். வெளி நாட்டில் வசிப்பவர்கள் தாய் நாட்டில் செட்டில் ஆகலாம். வேலைகள் வாய்ப்பு வசதிகள் அமையும். பாக்ய ஸ்தானத்தில் சனி கேது இருப்பதால் வெளிநாட்டு யோகமும் அமையும். சனியால் யோகம் அதிகரிப்பதால் புதிய வேலைக்கு முயற்சி செய்யலாம்.



ரிஷபம்:
கலை ரசனை மிக்க ரிஷப ராசிக்காரர்களே... இந்த வாரம் ராசிக்கு இரண்டாம் வீட்டில் சூரியன், ராகு, சுக்கிரன், மூன்றாம் வீட்டில் செவ்வாய், புதன், ஏழாம் வீட்டில் குரு எட்டாம் வீட்டில் சனி, கேது என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்துள்ளது. எதிர்பாரத வருமானம் கூடும் காரணம் இரண்டாம் வீட்டில் உள்ள சூரியன், சுக்கிரன் ராகுதான். மூன்றாம் வீட்டில் புதன் செவ்வாய் உடன் இணைந்திருப்பது ராஜயோகம். தொழில் ரீதியான வெற்றி கிடைக்கும். பொழுதுபோக்கு சந்தோஷம் அதிகரிக்கும். பயணங்கள் மூலம் நன்மைகள் நடைபெறும். புகழ் கூடும். செல்வம் செல்வாக்கு அதிகரிக்கும். வியாபாரத்தில் நல்ல தன லாபம் கிடைக்கும். குரு பகவான் உங்க ராசியை பார்ப்பதால் பிள்ளைகளினால் நன்மைகள் நடைபெறும். பிள்ளைகளுக்கு இருக்கும் பிரச்சினைகள் தீரும் மனக்குறைகள் நீங்கும். புகழ் கூடும். செல்வம் செல்வாக்கு அதிகரிக்கும். வியாபாரத்தில் நல்ல தன லாபம் கிடைக்கும். 17ஆம் தேதிக்கு மேல் சூரியன் மூன்றாமிடத்தில் செவ்வாய் புதனுடன் சஞ்சரிக்கும் காலத்தில் வீடு மாறும் சூழ்நிலை உண்டாகும். உத்தியோகத்தில் இடம் மாற்றம் உண்டாகும், அடிக்கடி பக்கத்து ஊருக்கு பிரயாணம் செய்யும் நிலை உண்டாகும். வியாபாரம் நல்ல தன லாபம் கிடைக்கும். சனி பார்வை அஷ்டமத்தில் இருப்பதால் வரவை விட செலவு அதிகமாக இருக்கும். கணவன் மனைவி உறவில் சில உரசல்கள் வரும். புதன்கிழமைகளில் பெருமாள் கோவிலுக்கு சென்று துளசி மாலை சாற்றி வணங்கவும். உடல் நல தொந்தரவை சமாளிக்க மருத்துவரை அணுகவும்.



மிதுனம்:
ராசியில் சூரியன், சுக்கிரன், ராகு, வாக்கு ஸ்தானத்தில் செவ்வாய், புதன், ஆறாம் வீட்டில் குரு, ஏழாம் வீட்டில் சனி, கேது என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்துள்ளது. செவ்வாய் வாக்கு ஸ்தானத்தில் இரண்டாம் வீட்டில் இருப்பதால் யாருடனும் வாக்குவாதம் செய்ய வேண்டாம். உறவுகளுடன் பகை வேண்டாம் சண்டைகளை தவிருங்கள். நெருப்பு வார்த்தைகள் உங்களுக்கு தொல்லைகளை ஏற்படுத்தும் ராசியில் சுக்கிரன் இருப்பதால் முகத்தில் பொலிவு கூடும். வேலை செய்யும் இடத்தில் உற்சாகமாக இருப்பீர்கள். குடும்ப வாழ்க்கையில் கணவன் மனைவி இடையே பிரச்சினைகள் தேடி வரும். உஷ்ணம் தொடர்பான நோய்கள் ஏற்படும். 17ஆம் தேதிக்கு மேல் சூரியன் இரண்டாமிடத்தில் சஞ்சரிக்கும் காலத்தில் பேச்சில் அதிகாரம் அதிகரிக்கும். அடிக்கடி கோபம் வரும். உணர்ச்சிவசப்பட்டு நிதானத்தை இழக்க வேண்டாம். தியானம் செய்யுங்கள். குரு ஆறாம் வீட்டில் இருப்பதால் தடைகள் தாமதங்கள் ஏற்படுகிறது. எதிர்ப்புகள் வலுக்கும். பெரியவர்கள் ஆலோசனையுடன் எதையும் தேர்வு செய்யுங்கள். வாகன போக்குவரத்தில் கவனம், பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம்.



கடகம்:
ராசியில் செவ்வாய், புதன், ராசிக்கு விரைய ஸ்தானத்தில் சூரியன், சுக்கிரன், ராகு ஐந்தாம் வீட்டில் குரு ஆறாம் வீட்டில் சனி கேது என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்துள்ளது. 12ல் சுக்கிரன் சூரியன் இருந்தாலும் ராசி மீது குரு பார்வை விழுவதால் சுப விரையங்கள் ஏற்படும். 17ஆம் தேதிக்கு மேல் சூரியன் உங்கள் ஜென்ம ராசியில் செவ்வாய் உடன் இணைகிறார். வேலை தேடுபவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். பணவருமானம் அதிகரிக்கும். செவ்வாய் உங்கள் ராசியில் இருப்பதால் சுய தொழில் யோகம் கூடி வரும் பிசினஸ் செய்பவர்களுக்கு புதிய சிந்தனைப் பற்றிய எண்ணம் தோன்றும். பொருட்களை அதிகம் வாங்கி ஸ்டாக் வைக்க வேண்டாம். ஷேர்மார்க்கெட் முதலீடுகளைத் தவிர்க்கவும். உங்களின் பணவருமானம் இருந்தாலும் நிறைய தடைகள் வரும் செலவுகளும் அதிகரிக்கும். வேலை விசயமாக செய்யும் முயற்சி கைகூடி வரும் வேலை கிடைக்கும். அதிகமாக கடன் வாங்க வேண்டாம். முருகனை வழிபட செய்தொழில் சிறப்படையும்.



சிம்மம்:
ராசிக்கு லாப ஸ்தானத்தில் சூரியன்,சுக்கிரன், ராகு, விரைய ஸ்தானத்தில் செவ்வாய், புதன், சுக ஸ்தானத்தில் குரு, பஞ்சம ஸ்தானத்தில் சனி கேது என இந்த வாரம் கிரகங்களின் சஞ்சாரம் அமைந்துள்ளது. வார முற்பகுதியில் லாப ஸ்தானத்தில் சூரியன், ராகு, சுக்கிரன் உடன் சஞ்சரிக்கிறார். நன்மைகள் அதிகம் நடைபெறும். லாப சூரியனால் உயர் பதவிகள் பட்டங்கள் தேடி வரும். புரமோசன் கிடைக்கும். பிரச்சினைகள் சரியாகும். வேலை மாற்றம் பற்றிய தகவல்கள் வரலாம். ராசிநாதன் சூரியன் வார மத்தியில் உங்கள் ஜென்ம ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் சஞ்சரிக்கப் போகிறார். அலைச்சல்களினால் உடலில் சோர்வு அதிகரிக்கும். இந்த வாரம் மாணவர்களுக்கு நினைத்த படிப்பு படிக்க காலம் கணிந்து வருகிறது. உயர்கல்வி யோகம் கூடி வருது. அசாத்திய திறமைகள் வெளிப்படும். மாணவர்களுக்கு வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் நல்ல வாய்ப்பு அமையும். பெண்கள் வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். வீடு, நிலம் வாங்குபவர்கள் அவசரப்பட்டு பணத்தில் முதலீடு செய்ய வேண்டாம். கார் வாங்குபவர்களுக்கு இது யோகமான காலம். வண்டி வாகனம் வாங்கலாம். செய்யும் செயல்களில் கவனமும் எச்சரிக்கையும் தேவை. வியாழக்கிழமைகளில் குருபகவானை வணங்க பாதிப்புகள் குறைந்து நன்மைகள் நடைபெறும்.



கன்னி:
ராசிக்கு பத்தாம் வீடான தொழில் ஸ்தானத்தில் சூரியன், சுக்கிரன், ராகு லாப ஸ்தானத்தில் செவ்வாய், புதன், நான்காம் வீட்டில் சனி, கேது என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்துள்ளது. சிரமங்களில் இருந்து நீங்கள் வெளியே வருவீர்கள். நோய்கள், கஷ்டங்கள் அலைச்சல்கள் தீரும். உழைக்கும் ஆற்றல் பெருகும். வேலை கிடைக்கும். வெற்றிகள் தேடி வரும் வேலை மாற்றம் ஏற்படும். புரமோசன் தகவல்கள் வந்து சேரும். வார மத்தியில் சூரியன் லாப ஸ்தானத்திற்கு மாறும் போது சம்பவ உயர்வும் அதிகரிக்கும். சுக்கிரனால் நன்மைகள் நடைபெறும். அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வுகள் தேடி வரும். மூன்றாம் வீட்டில் குரு இருப்பதால் பராமரிப்பு பணிகளை கவனிங்க. நான்காம் வீட்டில் உள்ள சனியும் பத்தாம் வீட்டில் உள்ள சூரியனும் சந்திப்பதால் உங்களை நீங்களே பத்திரமா பாத்துக்கங்கள். பிசினஸ்காக கடன் வாங்கதீங்க. உடல் நலத்தில் கவனிக்காவிட்டால் நரம்பு பிரச்சினை வரும். உங்க அலுவலகத்தில் வேலை செய்பவர்களிடம் கவனம் தேவை. குரு மூன்றாம் வீட்டில் இருப்பதால் கவனம் அவசியம். பெண்களுக்கு முன்னேற்றம் வரும் படிப்பிற்கு ஏற்ற வேலை கிடைக்கும். இந்த வாரம் ஆஞ்சநேயரை வணங்க நன்மைகள் நடைபெறும்.



துலாம்:
ராசிக்கு பாக்ய ஸ்தானத்தில் சூரியன், சுக்கிரன், ராகு, பத்தாம் வீட்டில் செவ்வாய், புதன், தன ஸ்தானத்தில் குரு, மூன்றாம் வீட்டில் சனி, கேது என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்துள்ளது. 17ஆம் தேதி சூரியன் தொழில் ஸ்தானத்தில் செவ்வாய் புதனுடன் இணைகிறார். நிறைய நன்மைகள் நடைபெறும் வாரம் இது. திருமண முயற்சிகள் கைகூடி வரும். அப்பாவின் உடல் நலனில் அக்கறை தேவை. மாணவர்கள் படிப்பில் மிக நன்றாக கவனம் செலுத்துங்கள்.

மருத்துவம் தொடர்பான உயர்கல்வி படிப்பவர்களுக்கு கிரகச் சூழ்நிலை சாதகமாக உள்ளது. வெளிநாடு சென்று படிக்க யோகம் கூடி வருகிறது. வார இறுதியில் சூரியன் இட மாற்றத்தினால் அரசு வேலையில் இருப்பவர்களுக்கு புரமோசன் தேடி வரும். பணப்பிரச்சினைகள் தீரும். குழந்தைகள் குடும்பத்தில் ஒத்துழைப்பு தருவார்கள். உயர் அதிகாரிகளிடம் கருத்து வேறுபாடு வேண்டாம். உடன் பணிபுரிபவர்களிடம் ஜாக்கிரதையாக பேசுங்கள். வெளிநாட்டில் இருந்து நல்ல தகவல் தேடி வரும். சிலருக்கு தோல் நோய்கள் வரும் அலர்ஜிகள் எட்டிப்பார்க்கும். பெண்களுக்கு மிகச்சிறந்த வேலை வாய்ப்பு கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இந்த வாரம் புதன்கிழமைகளில் பெருமாள் கோவிலுக்கு சென்று வணங்க நன்மைகள் நடைபெறும்.



விருச்சிகம்:
ராசிக்கு எட்டாம் வீட்டில் சூரியன், சுக்கிரன், ராகு ஒன்பதாம் வீட்டில் செவ்வாய், புதன் ராசியில் குரு, ராசிக்கு இரண்டாம் வீட்டில் சனி, கேது என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்துள்ளது. வார இறுதியில் சூரியன் ஒன்பதாமிடத்திற்கு மாறுவதால் தொழில் உத்தியோகத்தின் காரணமாக நீண்ட தூரம் பிரயாணம் செய்ய வேண்டியிருக்கும். உடல்நலம் சார்ந்த பிரச்சினைகள் சரியாகும். வியாபார ரீதியாக இருந்த தடைகள் நீங்கும். இரண்டாம் வீட்டில் சனி கேது இருப்பதால் குடும்பத்தில் வாக்குவாதங்களை தவிர்த்து விடுங்கள். வாக்கில் சனி வம்பு வரும் கூடுமானவரை மவுன விரதம் நல்லது இல்லாவிட்டால் வம்பில் மாட்டிக்கொள்வீர்கள். நிறைய பணம் கிடைக்கும் வீடு மனை வாங்கும் யோகம் வரும். உங்களின் விசா தொடர்பான பிரச்சினைகள் தீரப்போகிறது. பணிகளில் கவனம் செலுத்துங்கள். குறைகள் நிவர்த்தியாகும். குழந்தைகள் வளர்ப்பில் கவனம் செலுத்துங்கள். குழந்தைகளிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்படும் என்பதால் அமைதியாக இருங்கள். பாத சனி படுத்தி எடுக்கும் பெண்களைப் பொறுத்தவரை உடல் நலத்தில் அக்கறை எடுத்துக்கொள்ளுங்கள். சின்னச் சின்ன மன உளைச்சல் ஏற்பட்டாலும் பிரச்சினைகளில் இருந்து முடிவு கிடைக்கும். உங்களுக்கு வரும் சோதனைகளை சந்திக்கும் பலம் கிடைக்கும். சனி பகவானை சனிக்கிழமைகளில் எள் எண்ணெய் தீபம் ஏற்றி வணங்க நன்மைகள் நடைபெறும்.



தனுசு:
ராசிக்கு ஏழாம் வீட்டில் சூரியன், சுக்கிரன், ராகு, எட்டாம் வீட்டில் செவ்வாய், புதன் விரைய ஸ்தானத்தில் குரு, ஜென்ம ராசியில் சனி கேது என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்துள்ளது. ஏழாவது வீட்டில் மூன்று கிரகங்கள் இருப்பதால் ஆதாயம் எதுவுமில்லை. வார இறுதியில் சூரியன் எட்டாமிடத்திற்கு மாறுவதால் அரசாங்கத்திடமிருந்து வர வேண்டிய பணம் வரும் காலம். அதிகம் மன உளைச்சலுக்கு ஆளாகி வந்த உங்களுக்கு இனி நல்லது நடப்பதற்கான சூழ்நிலைகள் வரத் தொடங்கியிருக்கும். பிரச்சினைகள் முடிவுக்கு வரக்கூடிய காலம் வந்து விட்டது. பிரச்சினைகள் முடிவுக்கு வரக்கூடிய நேரம் நெருங்கி விட்டது. நல்லது நடக்கும் என்ற நம்பிக்கை ஊட்டக்கூடியவராக குரு இருப்பார். எட்டாவது வீட்டில் இருக்கும் கிரகங்களின் மீது உங்கள் ராசிநாதன் குருவின் பார்வை விழுவது சிறப்பம்சம். சனிபகவான் மூலம் நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். சுக்கிரனை சனி பார்வையிடுவதால் மனைவி உடல் நலன் மேல் அக்கறை தேவை. சனி கேது சஞ்சாரம் வம்பு வழக்குகளை கொண்டு வரலாம். வேலை தேடும் உங்களின் மனதில் திருப்தி இல்லாத நிலையே இருக்கும். கிடைக்கிற வேலையை பத்திரமாக பயன்படுத்துங்கள். நட்பு விசயத்திலும் எச்சரிக்கை தேவை. வண்டி வாகனங்களில் செல்லும் போதும் நெருப்பு விசயங்களிலும் எச்சரிக்கையும் கவனமும் தேவை. செவ்வாய்கிழமை முருகனை வணங்க நன்மைகள் நடைபெறும்.



மகரம்:
ராசிக்கு ஆறாம் வீட்டில் சூரியன், சுக்கிரன், ராகு, ஏழாம் வீட்டில் செவ்வாய், புதன், விரைய ஸ்தானத்தில் சனி, கேது, லாப ஸ்தானத்தில் குரு என இந்த வாரம் கிரகங்களின் சஞ்சாரம் அமைந்துள்ளது. நிறைவான வாழ்க்கை நடத்துங்கள் கடன் வாங்க வேண்டாம். காரணம் உங்க ஆறாம் வீட்டில் கிரகங்கள் சஞ்சாரம் கூட்டணி அப்படி இருக்கிறது. செவ்வாய் ஏழாம் வீட்டில் இருக்கிறார் கூடவே புதன் இருக்கிறார். இதயநோய், வயிறு நோய் வாய்வு கோளாறினால் வரும் ஏழரை சனி தொடங்கியுள்ளதால் கவனம் தேவை. கணவன் மனைவி உறவில் மூன்றாம் நபர்களுக்கு இடம் தரவேண்டாம். கோபப்பட வேண்டாம். ராமயாணத்தில் சுந்தரகாண்டம் படிக்கவும். திருமணத்திற்கு பெண் பார்ப்பவர்கள் பொறுத்தம் பார்ப்பவர்கள் கவனம் தேவை. காரணம் ஏழாம் வீட்டில் செவ்வாய் நீசமடைந்திருக்கிறார். வார இறுதியில் சூரியன் ஏழாம் வீட்டிற்கு மாறும் காலத்தில் தொழில் விசயமாக வெளியூர் பயணம் அமையும். நல்ல செய்தி எதிர்பார்த்த தகவல் வந்து சேரப்போகிறது. உங்கள் உடல் நலம் சார்ந்த விசயங்களில் கவனம் தேவை. பணம் பற்றாக்குறை இருந்துக்கொண்டே இருக்கும். தொழில் ரீதியான படிப்பு மாணவர்களுக்கு அமையும். குடும்பத்தில் வாக்குவாதங்களை தவிருங்கள். சுப செலவுகள் ஏற்படும். பணவருமானம் அதிகம் கிடைக்கும். இந்த வாரம் திங்கட்கிழமைகளில் சிவ ஆலயம் சென்று வணங்க நன்மைகள் நடைபெறும்.



கும்பம்:
ராசிக்கு பஞ்சம ஸ்தானத்தில் சூரியன், சுக்கிரன் ராகு, ஆறாம் வீட்டில் செவ்வாய், புதன், பத்தாம் வீட்டில் குரு, லாப ஸ்தானத்தில் சனி, கேது என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்துள்ளது. அலுவலக வேலையில் மேன்மை நிலை உண்டாகும். ஐந்தாம் வீட்டில் மூன்று கிரகங்களின் கூட்டணியால் ஒருவித மன உளைச்சல், பயம் ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். ஆறில் செவ்வாய் இருப்பதால் நல்ல வேலைவாய்ப்பு கிடைக்கும். சிறு தூர பயணங்களால் சிறு காயங்கள் வரும் கவனம் தேவை. நெருங்கிய நண்பர் ஒருவர் பகையாக மாறலாம். உங்களிடம் வேலை செய்யும் வேலைக்காரர் உங்களுக்கு எதிராக மாறலாம். புதிதாக எந்த கடனும் வாங்க வேண்டாம். கடனை மைத்ர முகூர்த்த நேரத்தில் அடைக்கப் பாருங்கள். சூரியன் ஆறாம் வீட்டில் செவ்வாய், புதனோடு அமர்வது கும்பம் ராசிக்காரர்களுக்கு யோகமான கால கட்டம். தொழிலில் இருந்த தடைகள் விலகும். அருகில் உள்ள பெருமாள் கோவிலுக்கு போய் அர்ச்சனை செய்யுங்கள். மாணவர்களுக்கு உயர்கல்வி யோகம் தேடி வரும். வருமானமும் முன்னேற்றமும் அதிகரிக்கும். எதிரிகளால் தொந்தரவு வரும். பாதிப்பு நீங்க கால பைரவரை செவ்வாய்கிழமைகளில் செவ்வரளி மாலை சாற்றி வணங்குங்கள். மாணவர்கள் ஹயக்ரீவ மந்திரம் படிக்க கல்வியிலே உயர்வு வரும்.



மீனம்:
ராசிக்கு நான்காம் வீடான சுக ஸ்தானத்தில் சூரியன் சுக்கிரன் ராகு இணைந்திருக்க பஞ்சம ஸ்தானத்தில் செவ்வாய், புதனோடு இணைந்திருக்கின்றனர். ஒன்பதாம் வீட்டில் குரு பத்தாம் வீட்டில் சனி என இந்த வாரம் கிரகங்களின் சஞ்சாரம் அமைந்துள்ளது. தொழில் பார்ட்னர்களால் இடைஞ்சல் வரும் கவனம் தேவை. குரு நல்ல இடத்தில் இருப்பதால் எத்தனை இடைஞ்சல்கள் வந்தாலும் அதை சமாளிக்கும் தைரியத்தை கொடுப்பார். சுப செய்திகள் தேடி வரும். பிரச்சினைகளை தீர்ப்பதற்கான காலம் வந்து விட்டது. சுப காரியங்கள் நிறைய நடைபெறும். சுப பயணங்கள் செய்யலாம். திருமணமான பெண்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். பெண்களுக்கு எதிர்பார்த்த வேலை வாய்ப்பு கிடைக்கும். அம்மன் வழிபாடு அவசியம் தேவை. மாணவர்கள் படிப்பில் கவனம் தேவை ஆறாம் இடத்து சூரியன் நான்காம் வீட்டில் இருப்பதால் குல தெய்வ வழிபாடு செய்யுங்கள். சூரியன் வார இறுதியில் ஐந்தாம் வீட்டிற்கு மாறும் போது நன்மைகள் அதிகம் நடைபெறும். இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சியான வாரம். பொன் பொருள் சேர்க்கை உண்டு. பழனி முருகனை வழிபடுங்கள் வெற்றிகளை உருவாக்கித்தரும்.


No comments